அம்.. ஆ பெறாத ஒரு குழந்தைக்காக வளர்ப்புத்தாய் எதிர்கொள்ளும் போராட்டம்.
கேரள மாநிலத்தில் அருகில் இருக்கும் ஒரு மலை பிரதேசத்தில் பால் வாடி பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் தேவதர்ஷினி.
இப்படி இருக்கும் நிலையில் அந்த மலைப் பகுதியில் ரோடு போட காண்ட்ராக்ட் கிடைத்திருப்பதாக சொல்லி தெரிந்த ஒரு வார்டு மெம்பரின் தயவில் அந்த சிறிய கிராமத்தில் தங்குகிறார் திலீஷ் போத்தன்.
அதே கிராமத்தில் பெரியவர் ஒருவரை டீக் கடை நடத்தி வருகிறார் அடிக்கடி திலீஷ் போத்தன் அந்த டீக்கடை பெரியவரை சந்திக்க ஒரு சிலரை பற்றி விசாரிக்க ஒரு கட்டத்தில் தேவதர்ஷினியை பற்றியும் அவரிடம் வளரும் குழந்தையை பற்றியும் அவரிடம் திலீஷ் போத்தன் விசாரிக்க கோபமான பெரியவர் திலீஷ் போத்தன் நிஜமான ரோடு காண்ட்ராக்டர் அல்ல வேறு ஏதோ விஷயத்திற்காக வந்து இருக்கிறார் என்பது தெரிந்தவுடன் கடையை விட்டு விரட்டுகிறார்.
இதன்பின்னர் தேவதர்ஷினி சம்பந்தப்பட்ட அனைவரிடமும் அவர் விசாரணையை தொடங்கும்போது உண்மையான ரோடு காண்ட்ராக்டர் அல்ல திலீஷ் போத்தன் போலீஸ் அதிகாரி என தெரிய வருகிறது.
இறுதியில் தேவதர்ஷினியுடன் வளரும் பெண் குழந்தை யார்
என்ன காரணத்திற்காக திலீஷ் போத்தன் அவரை தேடி அந்த மலை பகுதிக்கு வருகிறார்.
இறுதியில் போலீசின் பிடியில் தேவதர்ஷினி சிக்கி கொண்டாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி குணசித்திர நடிப்பில் உணர்வுபூர்வமாக கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
திலீஷ் போத்தன்,மீரா வாசுதேவன் மற்றும் உடன் நடித்த மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
மற்றும் கோபி சுந்தரின் இசையும்,அனிஷ் லால் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
திரைக்கதை அமைப்பில் வெகுவாக பலம் சேர்த்து யாரும் யூகிக்க முடியாத கிளைமாக்ஸுடன் அனைவரும் பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தாமஸ் செபாஸ்டியன் அவர்களுக்கு பாராட்டுகள்.
அம்.. ஆ பாசமான தாய்மை போராட்டம்.
Get real time updates directly on you device, subscribe now.