நாயகன் ராஜன் தேஜஸ்வர் மனதளவில் ஈரம் அற்றுப்போய் எந்தவித வாழ்க்கை லட்சியம் இன்றி பணத்துக்காக மட்டுமே உயிர்களை பறிக்கும் இரக்கமற்ற கூலிப்படை அசுரனாக வாழ்ந்து வருகிறான்.இவன் ஏன் இப்படி வாழ்கிறான் என்றால் மலை அடிவாரப் பகுதியில் சிறு வயதில் தன் கண்முன்னே தாய் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை உலுக்கும் கொடூரத்தைக் கண்டு வேதனையில் உறைந்து இவ்வாறு வாழ்ந்து வருகின்றான்.
அவனது இந்த கொடூர பின்னணியை சுயலாபத்திற்காக பயன்படுத்தி சுரண்டும் ஊர் முதலாளிகளின் வழிகாட்டுதலில் ஒரு முக்கிய அரசியல்வாதியை கொல்வதற்கான ஒப்பந்தத்தை ஏற்று யோசிக்காமல் அதை நிறைவேற்றுகிறான்.தந்தையை இரக்கமின்றி படுகொலை செய்த அவனை பழிதீர்க்கும் அசைக்க முடியாத வெறியோடு, அந்த அரசியல் வாதியின் மகள் ஐரா அகர்வால் தந்தையின் நண்பர் மற்றும் அரசியல் செல்வாக்குமிக்க நாகிநீடுடன் இணைந்து ராஜன் தேஜஸ்வர் வாழும் வறண்ட ஆபத்தான மலை அடிவார வனப்பகுதியை தேடிப் புறப்படுகிறாள். ஆனால் அங்கு அவளுக்கு எதிர்பாராத பேரபாயங்களும் அதிர்ச்சிகளும் காத்திருக்க, கூடவே இருந்து துரோகம் இழைக்கும் நாகிநீடுடனின் நயவஞ்சகத்தால் ஷர்மிளாவின் உயிருக்கே ஆபத்து சூழ்கிறது.இந்த இக்கட்டான கட்டத்தில் தன் தந்தையைக் கொன்ற ராஜன் தேஜஸ்வரே ஐரா அகர்வால் காப்பாற்ற வேண்டிய முரண்பாடான சூழ்நிலை உருவாக அம்புபோல் பாயும் வன்முறைக்கு மத்தியில் திருந்தி வாழ நினைக்கும் ராஜன் தேஜஸ்வரின் நேர்மையை ஐரா அகர்வால் உணர்கிறாள்.அதைத் தொடர்ந்து, உண்மையான எதிரிகளிடமிருந்து அவர்கள் இருவரும் எப்படித் தப்பிக்கிறார்கள், வன்முறைச் சூழலில் உருவாகும் திருப்புமுனைகள் உடன் அவர்களின் பயணம் எந்த இலக்கை நோக்கி முடிகிறது என்பதே மீதிக்கதை.
கூலிப்படை கொலையாளி கதாபாத்திரத்திற்கு தேவையான முரட்டுத்தனமான உடலமைப்பை ராஜன் தேஜஸ்வர் கச்சிதமாக வெளிப்படுத்தி அருகன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.
ஐரா அகர்வால் இயல்பான தோற்றத்திலும், நேர்த்தியான நடிப்பிலும் அனைவரது கவனத்தையும் பெறுகிறார்.
மற்றும் ஜார்ஜ் மரியான்,நாகிநீடு,கல்கி ராஜன்,சாய் தீனா,ஹரிஷ் பெராடி,வாசுதேவன் முரளி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் மிக்கி ஜெ.மேயர் இசையும்,ஒளிப்பதிவாளர் பரத் குமார் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
எளிய மக்களின் வறுமையை மூலதனமாக்கி அவர்களை குற்றவாளிகளாக மாற்றும் அதிகார வர்க்கத்தின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய கதைக் களத்தை கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குனர் திருஅருள் கிருஷ்ணா அவர்களுக்கு பாராட்டுகள்.
அமரம்’ வன்முறை ஆக்ஷன் நிறைந்தது
.
