எனிமி ஆப் தி ஸ்மக்ளர் விமர்சனம்

ஜெ.டி.சக்ரவர்த்திக்கு 25 ஆயிரம் கோடி மதிப்பு உள்ள போதை பொருளை லால் துபாயில் இருந்துகொண்டு கப்பல் மூலம் அனுப்பி வைக்கிறார்.அந்த போதைப் பொருள் உள்ள கண்டெய்ணரை ஜெ.டி.சக்ரவர்த்தியிடம் வேலைபார்க்கும் சரண் சக்தியும்,பாலசரவணனும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தெரியாமல் பல போலியான தஸ்தாவேஸ்கள் தயார் செய்து அந்த 25 ஆயிரம் கோடி மதிப்புள்ள உயர்ரக போதைப் பொருள் உள்ள கண்டெய்னரை மிக எளிதாக துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார்கள்.வெளியே வந்த கண்டெய்னரை பாதிவழியில் சுங்கத்துறை ஆணையர் சமயமுரளி மடக்கி பிடித்து விடுகிறார்.இந்த செய்தியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள்.அந்த செய்தியில் 5 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை பொருள் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மீதமுள்ள 20 ஆயிரம் கோடி போதைப் பொருள் எங்கே என்பதே படத்தின் மீதிக் கதை.
ஜே.டி.சக்கரவர்த்தி வில்லத்தனத்தில் லாலுக்கு இணையாக அனைவருது கவனத்தையும் ஈர்த்து நடித்துள்ளார்.
மற்றும் ராதிகா சரத்குமார்,சரண் சக்தி, பாலசரவணன்,ஸ்மேகா,காளிவெங்கட், ஜாபர் ஷாதிக்,மைம்கோபி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் காவின் பாஸ்கர் ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் சாம் டானியல் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
இப்படத்தை தயாரித்ததோடு மட்டும் அல்லாமல் படத்தை இயக்கி ஆணையராக நடித்திருக்கும் சமயமுரளி உண்மையாகவே சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றியவர்.அவர் பணியிலிருந்த காலகட்டத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அப்படியே சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து சிறந்த முறையில் இயக்கி திரைப்படமாக்கியிருக்கிறார் அவருக்குப் பாராட்டுகள்.
எனிமி ஆப் தி ஸ்மக்ளர் சிறந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர்.