ககனச்சாரி விமர்சனம்


2040 ஆம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகளின் தாக்குதலை எதிர்த்து போராடி உயிர் பிழைத்த முன்னாள் ராணுவ அதிகாரி கணேஷ் குமார்,இதனால் அவர் அன்னிய வேட்டைக்காரன் என்ற பெயரைப் பெற்றார்.
வெள்ள நீரில் மூழ்கி, வேற்றுகிரகவாசிகளின் படையெடுப்பின் அச்சுறுத்தலை எதிர்கொண்டு, பேரழிவுக்கு பிந்தைய கேரளாவில் நிகழ்வுகளாக அமைக்கப்பட்டுள்ளன.
எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பாக இரண்டு உதவியாளர்கள் கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோருடன் ஒரு பாழடைந்த கட்டிட வளாகத்தில் கனேஷ் குமார் வசிக்கின்றார்.கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் சூழ்நிலைகளில் இரண்டு இளைஞர்கள் ஒரு ஆவணப்படம் எடுக்க அவர்களின் வீட்டில் முகாமிட்டுள்ளனர். அப்போது தனது வாழ்க்கை பற்றியும், தான் எதிர்கொண்ட ஏலியன் சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமாரும், அவரது உதவியாளர்களும் விவரிக்கிறார்கள். இதற்கிடையில், மனித உடையில் 250 வயதாகும் ஒரு வேற்றுகிரகவாசியான அனார்கலி மரிக்கார் வருகை கணேஷ் குமாரின் குடியிருப்பில் விஷயங்களை சிக்கலாக்குகிறது. இதற்கிடையில், இரண்டு வீரர்கள் விக்டரின் இல்லத்தில் பதுங்கியிருந்து அவரிடம் இருந்து பணம் பெறுகிறார்கள். கோகுல் சுரேஷ் ஏலியன் மீது காதல் வயப்பட்டு அவளை கவர்ந்திழுக்க முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் பிறகு நடக்கும் குளறுபடிகளை கலகலப்பான காமெடியுடன் நகர்வதே மீதிக்கதை.
கணேஷ் குமார் நகைச்சுவை செயல்களுடன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் திறம்பட நடித்துள்ளார்.
ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிக்கார் படத்தில் வேற்றுக்கிரக கதாபாத்திரத்துடன் கச்சிதமாக பொருந்தி ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்கீஸ் இருவரும் தங்களின் பாத்திரத்தை உணர்ந்து திறமையாக நடித்துள்ளனர்.
ஷங்கர் சர்மாவின் இசையும்,சுர்ஜித் எஸ் பாய் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் ஒத்துழைப்பு.
இயக்குனர் அருண் சந்து முற்றிலும் புதிய மற்றும் மாறுபட்ட கோணத்தில் நகைச்சுவை யுடன் அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில் நமக்கு வழங்கியுள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
ககனச்சாரி அறிவியல் கலந்த காமடி.