4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ள பிரம்மாண்ட கூட்டணி, மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம் எனப் பல சிறப்பம்சங்களுடன் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் உருவாகியுள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்களுக்கே உரிய பிரம்மாண்டம், பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் விறுவிறுப்பான கதை சொல்லல் ஆகியவற்றுடன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை இப்படம் வழங்கத் தயாராகி வருகிறது.
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.