நயன்தாரா காவல் துறை காவலாராக படத்தில் தோன்றுகிறார்.அவரது வளர்ப்பு அம்மாவாக ஊர்வசி நடித்துள்ளார்.இரவுநேர தூக்கத்தில் நயன்தாரா பயங்கரமான கனவு காண்கிறார்.அந்த கனவில் வரும் அமானுஷ்ய காட்சிகள் மிகப் பயங்கரமாக இருக்கிறது.அக்கனவில்“மைலாஞ்சி”என்ற ஊரை அவர் காண்கிறார்.அதனால்அந்த ஊருக்கு தன் வேலையை மாற்றுதல் வாங்கி கொண்டு காவலராக வந்து சேர்கிறார் நயன்தாரா.அந்த ஊரில் சிறு குழந்தைகளை ரெஜினா கசாண்ட்ரா சாத்தானுக்கு நரபலி கொடுத்து வருகிறார்.ஏன் அவர் நரபலி கொடுக்கிறார் அந்த ஊர்க் கோவிலில் காணாமல் போன மூக்குத்தி அம்மன் சிலை எங்கே அந்த மூக்குத்தி அம்மனே தான்தான் என்பதை அறியாமலேயே இருக்கும் நயன்தாரா எப்போது மூக்குத்தி அம்மனாக வெளிப்படுகிறார் என்பதே மீதிக்கதை.
நயன்தாராவின் அம்மன் தோற்றம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
மற்றும் ரெஜினா கசாண்ட்ரா,ஊர்வசி, யோகிபாபு,சுனில்,குஷ்பூ,சினேகா ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும், சுவாமிநாதன்,ராமச்சந்திர ராஜூ,மைனா நந்தினி,விச்சு விஸ்வநாத்,சத்தியன், இனியா ஆகியோர் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
ஹிப்ஹாப் தமிழாவின் இசையுமா.கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
தெய்வ சக்திக்கும் தீய சக்திக்கும் நடக்கும் போராட்டத்தை மையமாக கொண்டு விறு விறுப்பான திரைக்கதை அமைத்து சிறப்பாக இயக்கி இருக்கும் இயக்குனர் சுந்தர்.சி அவர்களுக்கு பாராட்டுகள்.
மூக்குத்தி அம்மன் 2 பிரமாண்டமான சிறப்பு.