பனிவிழும் இரவு விமர்சனம்

நாயகன் அருண் கார்த்தி கொடைக்கானலில் தான் திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்ட மண பெண்ணான நாயகி எனாக்க்ஷி கங்குலியுடன் திருமணத்திற்கு முன்பு எடுக்கப்படும் ப்ரி வெட்டிங் ஷூட்டுக்காக இளம் ஜோடிகள் ஒரு பங்களாவுக்கு செல்கின்றனர்.இந்நிலையில் திடீரென எனாக்க்ஷி கங்குலி காணாமல் போக அதிர்ச்சியடையும் அருண் கார்த்தி கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜிடம் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான எனாக்க்ஷி கங்குலியை காணவில்லை என புகார் அளிக்கிறார்.அருண் கார்த்தியின் புகாரின்படி கான்ஸ்டபிள் கருப்பு நம்பியாருடன் சேர்ந்து காணாமல் போன எனாக்க்ஷி கங்குலியை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ்.இறுதியில் இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் நாயகி எனாக்க்ஷி கங்குலியை கண்டுபிடித்தாரா அருண் கார்த்தி திருமணம் செய்து கொள்ள போகும் பெண் எனாக்க்ஷி கங்குலி என்பது உண்மையா முடிவில் எனாக்க்ஷி கங்குலி கிடைத்தாரா இல்லையா என்பதுதே படத்தின் மீதிக்கதை.
அருண் கார்த்திக் தனது உணர்வுகளை சிறப்பாக காட்டி சிறந்த முறையில் நடித்துள்ளார்.
எனாக்‌ஷி கங்குலி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
கருப்பு நம்பியார்,சேரன்ராஜ்,சரவணசக்தி, செ.ரா.ராஜேஷ்,கஜராஜ்,சுருளி,உமர், வினோத்,ஆகியோர் சிறப்பாக நடித்து கவனம் ஈர்த்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜெயக்குமார் தங்கவேல் ஒளிப்பதிவும்,சதாமுருகனின் இசையும் கதைக்கு வலு சேர்த்திருக்கிறது.
இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக் களத்தை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் செ.ரா.ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுகள்.
‘பனி விழும் இரவு’பதற்றம் நிறைந்த இரவு.