“சிங்காரம்” விமர்சனம்

நரிக்குறவராக நாயகன் யோகிபாபு தனது தந்தை எம்.எஸ்.பாஸ்கர்,அம்மா தீபா, மற்றும் தனது இனத்தவர்களுடன் கோயம்புத்தூர் யானைமலை பகுதிக்கு ஊசி பாசிமணிகளை விற்க வருகிறார்.அங்கு உயர் இனத்தை சேர்ந்த சென்றாயனால் அவமானப்படுத்தபடுகிறார். மானமரியாதையோடு வாழ்வதற்கு அவமானங்களை சுமந்துகொண்டு வாழ்க்கையை தள்ளவேண்டியதாய் இருக்கிறது.இந்நிலையில் லாட்டரி சீட்டு மூலம் யோகிபாபு கோடீஸ்வரராகிறார். செல்வந்தராக மாறியதும் அவருக்கும் அவரது இனத்தவருக்கும் மரியாதை கிடைத்ததா இல்லையா என்பதுதே மீதிக்கதை.இக்கதை 1990 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார் யோகிபாபு.
மற்றும் வேல ராமமூர்த்தி,எம்.எஸ். பாஸ்கர்,மரியா வின்சென்ட்,சார்ம்ஸ், ஆர்த்தி கணேஷ்,மனோபாலா,கல்கி, மாரிமுத்து,படவா கோபி,சென்ட்ராயன், டி.எஸ்.ஆர்,தீபா சங்கர்,சபிதா ராய், ஜாவா சுந்தரேசன்,கே.எம்.கணேஷ்கர் ஆகியோர் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
பிரசன்னாவின் ஒளிப்பதிவும்,சாம்.சி.எஸ்.இசையும் கதைக்கு பலம்.
உண்மையாக நடந்த ஒரு சம்பவத்தை கருவாக கையில் எடுத்து அதற்கு சிறந்த திரைக்கதை அமைத்து இனபாகுபாட்டை சமூக சிந்தனையோடு சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குனர் கே.வி.கதிர்வேலு அவர்களுக்கு பாராட்டுகள்.
“சிங்காரம்” சிறப்பு