இருவரின் பிள்ளைகளுக்கும் எந்த உறவும் இல்லாமல் அவர்களும் விரோதிகளைப் போல பகைமை பாராட்டி வர,மூத்தவர் வேலா ராமமூர்த்தியின் இளைய மகனாக வரும் கதையின் நாயகன் சுரேஷ் நந்தா படத்தின் தயாரிப்பாளரும் இவரே இவர் தலையெடுத்து இந்தப் பிரச்சனைகளை எல்லாம் எப்படி தீர்த்து உறவுகளை மீண்டும் ஒன்று சேர்க்கின்றார் என்பதுதான் கதை.
படத்தின் நாயகனான சுரேஷ் நந்தா ஒரு ஹீரோவுக்குரிய அறிமுகம் ஆட்டம், பாட்டு என்றெல்லாம் இல்லாமல் சராசரி குடும்ப உறுப்பினராக தோன்றி தனது இயல்பான நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.
வேலா ராமமூர்த்தி வழக்கம் போன்ற மிடுக்குடன் கோபப் பார்வையில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அசால்டான நடிப்புக்கு சொந்தக்காரரான மாரிமுத்துவைப் பார்க்கும் போது இப்படி ஒரு இயல்பான நடிகர் இப்போது நம்மோடு இல்லாதது வருத்தப்பட வேண்டி இருக்கிறது.
நாயகி நந்தனா தனது இயல்பான நடிப்பை நடித்திருப்பது அந்த பாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறது.
சுரேஷ் நந்தாவின் அத்தையாக வரும் தீபா ஷங்கர், மாரிமுத்துவின் மனைவியாக வரும் செந்திகுமாரி,வேலா ராமமூர்த்தியின் மனைவியாக வரும் ரமா ஏனைய கதா பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பவர்களும் இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் தீபன் சக்கரவர்த்தியின் இசை.
எம். சீனிவாசனின் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பு.
உடன்பிறப்புகளுக்குள் பிரிவு வருவதும் பின்பு அவர்கள் உறவாடுவதும் வழக்கமான ஒன்று.ஆனால் பிரிந்த உறவுகளைச் சேர்ப்பது என்பது அத்தனை சுலபமானதல்ல..!’ என்பதை மண் மணத்தோடு சொல்லி நம்மை நெகிழச் செய்திருக்கும் இயக்குனர் நாகராஜ் கருப்பையா அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
வீராயி மக்கள் மண்ணின் மணம் மாறா பாசமான மக்கள்.