திரையுலக நட்சத்திரங்கள் திரள, பிரம்மாண்டமாக நடைபெற்ற KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமண விழா!
இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் சங்கமித்த KRG குழுமத்தின் கண்ணன் ரவி இல்லத் திருமணம்! கோலாகலமாக நடைபெற்ற தீபக் ரவி – செந்தாமரை திருமண விழா!
KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி – KRD Hospitality நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், KRG Productions நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான தீபக் ரவி மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் D.M. கதிர் ஆனந்த் – கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியினரின் மகள் கே. செந்தாமரை ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 31-ம் தேதியும், திருமணம் நவம்பர் 1-ம் தேதியும் சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் பல்வேறு தொழில் துறைகளில் செயல்பட்டு வரும் Kannan Ravi Group (KRG), கட்டுமானம், எலக்ட்ரோ மெக்கானிக்கல் சேவைகள், ரியல் எஸ்டேட், ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட துறைகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. ரவி கண்ணன் தலைமையில் வளர்ந்து வரும் இக்குழுமம், தற்போது இந்தியத் திரையுலகிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது.
KRG Productions சார்பில் ‘இராவண கோட்டம்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘TN 2026’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள கண்ணன் ரவி, தொடர்ந்து பல புதிய திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் இணைத் தயாரிப்பாளராகத் தீபக் ரவியும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.
இவ்வாறு சர்வதேச அளவில் பல்வேறு தொழில்களிலும், இந்தியத் திரையுலகிலும் தனது பயணத்தைத் தொடர்ந்து வரும் KRG குழுமத்தின் குடும்ப விழாவாக நடைபெற்ற இந்தத் திருமணம், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாகவும் பிரம்மாண்டமாகவும் நிறைவடைந்தது.