திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் ஷோபா மற்றும் சினிமாவில் வாய்ப்பு தேடிக் கொண்டு ஊர்சுற்றும் அசோக். பல முறை கரு கலைப்பு செய்யும் ஷோபா, கடைசியாக ஒரு பெண் குழந்தையை கரு கலைப்பு செய்ய முடியாத இக்கட்டான காரணத்தால் பெற்றெடுக்கிறார். கஷ்டத்தின் காரணமாக ஷோபா நர்ஸ் வினோதினி வைத்தியநாதன் பேச்சைக் கேட்டு குழந்தையை, கேரளாவில் வாழும் வித்யா (அபிராமி) மற்றும் பாலன் (சமுத்திரக்கனி) தம்பதிகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு தத்து கொடுத்து விடுகிறார். வித்யாவும் பாலனும் பாசமுடன் குழந்தையை வளர்க்கிறார்கள். ஒரு வருடம் கழித்து மீண்டும் அந்த பெண் குழந்தை வேண்டும் என்று ஷோபா முடிவு செய்து குழந்தைகள் நல சங்கத்தின் தலைவராக இருக்கும்மிஷ்கினையும் அதன் மூலம் நீதிமன்றத்தையும் அணுகுகிறார்.
இதற்கிடையில் ஷோபா பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்லாததும் உண்மை’ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தன் குழந்தைப் பற்றிய தகவலை சொல்கிறார். விளம்பரத்திற்காகவும், டிஆர்பி ரேட்டிங்கிற்காகவும் ரியாலிட்டி ஷோவை பரபரப்பாக்குவதற்காக பல முயற்சிகள் செய்கின்றனர். ரியாலிட்டி ஷோ நடத்தும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்இடம்மிருந்து தத்தெடுத்த வித்யா மற்றும் பாலன் தம்பதியருக்கு அழைப்பு வருகிறது, அதில் அவர் குழந்தையின் தாயான ஷோபா தனது குழந்தையை மீட்க உதவி கோரி அவர்களை அணுகியதாக கூறுகிறார். இதனால் மனம் உடைந்த வளர்ப்பு தம்பதிகள், தாயிடமிருந்து உரிய அனுமதியுடன் குழந்தையை தத்தெடுத்ததாக விளக்கி கூறி குழந்தையை வளர்க்க
முடியாது என்பதை உணர்ந்த பிறகு, குழந்தையை தத்து கொடுக்க பெற்றதாய் தான் முடிவு செய்தார் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.மேலும், வித்யாவும் பாலனும் ஷோபா கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவமனை செலவையும், மருத்துவ உதவி தேவைப்படும் போது குழந்தையின் சிகிச்சை செலவையும் தாங்களே நிரூபிக்கின்றனர்.குழந்தைக்காக தந்தைக்கு பெரும் தொகை கொடுத்ததாகவும் கூறுகின்றனர்.இருப்பினும், வளர்ப்பு தம்பதியர் பணம் செலுத்தியதால், அவர்கள் மீது வழக்கு திசை திரும்புகிறது, மேலும் அவர்கள் மீது குழந்தை கடத்தல் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த குற்றத்திற்காக வித்யா மற்றும் பாலன் ஆகியோரிடமிருந்து குழந்தை பிரிக்கப்படுகிறது? இறுதியில் வளர்ப்பு தம்பதியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதா? பெற்ற தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டதா? என்பது தான் படத்தின் க்ளைமேக்ஸ்.
சமுத்திரக்கனி, அபிராமி இருவரும் குழந்தையில்லாமல் அவதிப்படும் போதும், குழந்தை வந்த பின்பு அவர்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் போதும், திடீர் பிரச்சனையால் குழந்தையை பிரிந்து இருக்கும் போதும் வேறுவேறு தருணங்களின் அவர்களின் உணர்ச்சிகரமாக நடிப்பால் மனதை கவர்கின்றனர்.
ஷோபாவாக முல்லையரசி முதலில் குழந்தையை கொடுத்துவிட்டு பின்னர் மீண்டும் குழந்தையை மீட்க எடுக்கும் முயற்சிகள், அதற்காக அனைத்து வழிகளையும் கையாண்டு வளர்ப்பு தம்பதியருக்கு கொடுக்கும் நெருக்கடிகள் என்று படம் முழுவதும் தனது நடிப்பால் மிரட்டியுள்ளார்.
குழந்தைகள் நல சங்கத்தின் தலைவராக இயக்குனர்மிஷ்கின் நடித்திருப்பது மிகப்பெரிய பலம். முல்லை அரசியின் ஜோடியாக நடித்துள்ள அசோக்குமார் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும்ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், ரோபோ சங்கர், அனுபமா குமார், வினோதினி வைத்தியநாதன் ஆகியோரின் சிறந்த நடிப்பு படத்திற்கு பலம்.
இளையராஜா இசை படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து நம்மை உட்காரவைக்கிறது.
கிருஷ்ணசேகரின்ஒளிப்பதிவு படத்தின் பெரிய பலம், எடிட்டர சி.எஸ்.பிரேம்குமார் சிறப்பாக செய்துள்ளனர்.
இப்படி ஒரு எதார்த்தமான கதையை எடுத்த இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்டியாக வேண்டும்.
ஆர் யூ ஓகே பேபி பெற்ற தாய்க்கும் வளர்ப்பு தாய்க்கும் நடக்கும்உண்மயான உணர்ச்சிகரமான உரிமை நிறைந்த போராட்டம்.
