பூமர் அங்கிள் விமர்சனம்

கதைப்படி யோகிபாபு தனது ரஷிய வெளிநாட்டு மனைவியை பிரிந்து செல்வதற்காக அவர் போடும் கண்டிஷனை ஒப்புக் கொள்கிறார் இதிலிருந்துதான் கதை ஆரம்பமாகிறது.யோகிபாபுவின் மனைவி போடும் கண்டிஷன் என்னவென்றால் அந்த ஊரில் யோகிபாபுவின் பூர்வீக அரண்மனைஒன்று உள்ளது அங்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு நாள் தங்கி விட்டு வந்தால் விவாகரத்து தருகிறேன் என்ற வாக்குறுதிக்காக மனைவி அழைத்துக் கொண்டு செல்கிறார்.அதன் உள்நோக்கம் அப்பொழுது அவருக்கு தெரியவில்லை அவர் அங்கே வருவதை அறிந்து கொண்டு யோகிபாபுவின் மூன்று முன்னாள் நண்பர்களான சேஷ,பாலா மற்றும் தங்க துரை முன்பகை காரணமாக பல வருடங்களாக அவரை பழி வாங்க காத்திருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரண்மனைக்கு அவர்களும் வருகிறார்கள். இதற்கிடையில் தனது மனைவி அரண்மனைக்கு அழைத்து வரச் சொன்னதில் ஒரு உள்நோக்கம் இருப்பதை யோகிபாபு அறிந்து கொள்கிறார்.அங்கே அவரது மனைவியால் ஏற்படும் கடுமையான பிரச்சனையை எதிர்கொள்ளும் போது பழிவாங்க துடிக்கும் அவரது நண்பர்கள் அவர உடனான கருத்து வேறுபாடுகளை மறந்து அவருக்குஉதவுகிறார்கள்.இறுதியில் யோகிபாபு மனைவியின் உள்நோக்கம் என்ன அவள் என்ன திட்டமிட்டிருக்கிறாள், அவளுடைய திட்டங்களை யோகிபாபு எப்படி முறியடிக்கிறார் அரண்மனையில் இருக்கும் அறிவியல் கலந்த ரகசியம் என்ன யோகிபாபுவின் விஞ்ஞானி தந்தைப்பற்றிய விவரங்கள் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், சேசு, பாலா, தங்கதுரை, சோனா, மதன்பாபு என்று பலரும் சேர்ந்து அவரவர் திறமையை சரியாக பயன்படுத்தியுள்ளனர்.
சுபாஷ்தண்டபானி அவர்களின் ஒளிப்பதிவும்
சாந்தன் மற்றும் தர்ம பிரகாஷ் ஆகியோரது இசையும் படத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
வித்தியாசமாக முயற்சித்துள்ள இயக்குனர் ஸ்வதேஷ் எம் எஸ். அவர்களை பாராட்டவேண்டும்.
பூமர் அங்கிள் அறிவியல் நகைச்சுவை கலந்த ஹாரர்.