பாட்டல் ராதா’ விமர்சனம்

கதையின் நாயகன் குரு சோமசுந்தரம் கட்டுமானத் தொழிலாளர் இவரது மனைவி சஞ்சனா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.எந்நேரமும் மதுகுடிப்பதே வேலையாக வைத்திருக்கிறார் குரு சோமசுந்தரம்
இதனால், பொறுமை இழக்கும் அவரின் மனைவி சஞ்சனா குரு சோமசுந்தரத்தை போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கிறார்.அங்கிருந்து தப்பித்து விடுகிறார்.
வெளியே வந்து மீண்டும் குடிக்கத்தொடங்க இதனால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிய நேரிடுகிறது. , இறுதியில் நாயகன் குரு சோமசுந்தரம் போதை பழக்கத்தில் இருந்து மீண்டு வந்தாரா இல்லையா பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
பாட்டல் ராதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரம் நிஜ குடிகாரராகவே அந்த கதாபாத்த்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.
குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன் எதார்த்தமான நடிப்பின் மூலம் கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.
மற்ற கதா பாத்திரங்களான ஜான் விஜய், ஆண்டனி,பாரி இளவழகன்,ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ்.கருணா பிரசாத்,சுஹாசினி சஞ்சீவ், ஓவியர் சோவ்.செந்தில்,நவீன் ஜார்ஜ் தாமஸ், காலா குமார்,அன்பரசி என அனைவரும் கதைக்கு ஏற்ற தேர்வாக அமைந்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையும்,ரூபேஷ் ஷாஜியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
மது பழக்கத்தால் குடும்பங்களை எந்த நிலைமைக்கு செல்கின்றன என்பதை கருவாக வைத்து திரை படத்தை உருவாக்கியிருக்கும் இயக்குனர் தினகரன் சிவலிங்கம் அவர்களுக்கு பாராட்டுகள்.
’பாட்டல் ராதா’ மது பழக்கத்தால் அழிந்து கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய படம். குடும்பங்கள் கொண்டாட வேண்டிய சிறந்த படைப்பு.