பைரி விமர்சனம்

நாகர்கோவிலில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஆண்கள் அனைவருமே புறா பந்தயத்தில் ஈடுபடுபவர்கள்.தங்களது முழு நேரத்தையும் பறவைகளை வளர்பதிலும் அவைகளை இனப்பெருக்கம் செய்வதிலும் பந்தயத்தில் செலவிட்டு ஆர்வத்துடன் கோப்பைகள் மற்றும் பட்டங்களை வெல்வதை பெருமையான விஷயமாக கருதுபவர்கள் இதற்காக இவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள், அடிதடி,குத்து கொலை செய்வதற்கு கூட அஞ்சாதவர்கள். அந்த ஊரில் விஜி சேகர் புறா வளர்த்து பந்தய விளையாட்டின் அடிமைத்தனத்தை அறிந்து ஆண்கள் அழிவதை நேரில் கண்டவர் என்பதால் தன் பட்டதாரி மகன் சையத் மஜீத் புறாக்களை வளர்ப்பதிலும் பந்தயத்தில் ஈடுபடுவதையும் எதிர்க்கிறார். தன் மகன் அதற்கு இரையாகி தன் உயிரை இழக்கக் கூடாது என்பதற்காக புறா வளர்ப்பதில் இருந்து அவனைக் கடுமையாகக் கட்டுப்படுத்துகிறார். படித்த படிப்பிற்கான வேலையில் சேருமாறு வற்புறுத்துகிறார். தாயின் எதிர்ப்பு, திட்டுக்களையும் மீறி அவர் மகன் எதற்கும் கவலைப்படாமல் புறாக்களை வளர்ப்பதற்கான வழியைத் தேடுகிறார்.புறா கூடு கட்டவும், பறவைகளை வளர்க்கவும் அவரது நெருங்கிய நண்பர் ஜான் கிளாடி உதவியைப் பெறுகிறார். இந்நிலையில், அப்பகுதியில் ரமேஷ்ஆறுமுகம் அவர்கள் நடத்தும் புறா ரேஸ் போட்டி வருகிறது. அப்பகுதியில் சில கொலைகளை செய்து பெரும் ரௌடியாக சுற்றி வருகிறார் வினு லாரன்ஸ் புறா
பந்தயத்தில் இவர் செய்யும் மோசடியை கண்டுபிடித்து தட்டிக் கேட்கிறார் சையத் மஜீத் இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. அப்போது இருவரும் கலந்து கொள்ளும் புறா போட்டி நடக்கிறது இதனால் இருவருக்குள்ளும் இருக்கும் பகை பெரிய சண்டையாகி விடுகிறது. வினு லாரன்ஸ் கோபம் சையத் மஜீத் மீது திரும்புகிறது. அதன் பின் என்ன நடக்கிறது,என்பதே படத்தின் மீதிக்கதை.
சையத் மஜீத் கோபம் ஆக்ரோஷமான நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.
விஜி சேகர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
மற்ற நடிகர்களான சரண்யா ரவிச்சந்திரன், மேகனா எலன் மற்றும் ஜான் கிளாடி வினு லாரன்ஸ் ரமேஷ் ஆறுமுகம் ஆகியோர் அவரவர் பணியை சிறப்பான முறையில் செய்துள்ளனர் பாராட்டுகள்.
அருண்ராஜ் அவர்களின் இசை கதைக்கு கச்சிதம்.
ஏ.வி.வசந்த குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
எடிட்டர் ஆர்.எஸ்.சதீஷ் குமாரின் படத்தொகுப்பு விறுவிறுப்பாக அமைந்துள்ளது.
விக்கி மாஸ்டரின் ஸ்டன்ட் வேகம் அதிகம்.
பைரி வேகம் விறுவிறுப்பு.