
மெய்ப்பட செய்’ திரைப்பட விமர்சனம்
‘மெய்ப்பட செய்’ திரைப்பட விமர்சனம்
நாயகன் ஆதவ் பாலாஜியும், நாயகி மதுனிகாவும் காதலிக்கிறார்கள். இவர்களுடைய காதலுக்கு நாயகியின் தாய்மாமன் பி.ஆர்.தமிழ் செல்வனால் பிரச்சனை வருகிறது. இதனால் காதல் ஜோடி திருமணம் செய்துக்கொண்டு ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்களுக்கு துணையாக நாயகனின் மூன்று நண்பர்களும் செல்கிறார்கள்.
சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கும் இவர்கள், அந்த வீட்டினால் பெரிய பிரச்சனையில் சிக்குகிறார்கள். பிரச்சினையில் இருந்து மீண்டால் போதும் என்று ஆரம்பத்தில் நினைப்பவர்கள் பிறகு அதை எதிர்த்து நின்று போராடுவதோடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதற்காக களத்தில் இறங்குகிறார்கள். இறுதியில், அவர்கள் வென்றார்களா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘மெய்ப்பட செய்’.
நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி, முதல் படம் போல் இல்லாமல் காதல், செண்டிமெண்ட், சண்டைக்காட்சி என அன...