ஒய்.ஜி. மகேந்திரான் உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை வித்வான் சங்கீதமே உலகம் என்று வாழ்பவர்.ஆனால் காலப்போக்கில் அவருக்கு அல்சைமர் நோய் தாக்கத் தொடங்குகிறது.தான் பாடிய ராகங்கள், தனது குடும்பத்தினர், ஏன் தனது சொந்த அடையாளம் வரை அனைத்தையும் அவர் மெல்ல மெல்ல மறக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் அந்த நிமிடங்கள் பார்ப்பவர் நெஞ்சை உலுக்குமாறு அமைந்துள்ளது.இதற்கு நடுவில் அவருக்கும் அவரது மகன் ராஜ் ஐயப்பாவுக்கும் இடையே பெரும் தலைமுறை இடைவெளி மற்றும் ஈகோ மோதல்கள் நிலவுகின்றன.மகன் திடீரென ரம்யா பாண்டியனை திருமணம் செய்து கொள்வதால் அவரது குடும்பத்தில் பெரிய பிளவை ஏற்படுத்துகிறது.இதனால் அவதிப்படும் அவர்,தனது பொறுப்பற்ற மகனின் வாழ்க்கை முறை மற்றும் குடும்பச் சூழலை எப்படி சமாளிக்க முடியாமல் திணருகிறார். இந்த எமோஷனல் நிறைந்த நேரத்தில் சத்யராஜ் கதாபாத்திரம் ஒரு குறிப்பிட்ட மதக் கடவுளாக இல்லாமல், அன்பு மற்றும் வழிகாட்டுதலின் ஒட்டுமொத்த உருவமாக வந்து,அந்த குடும்பத்தின் காயங்களுக்கு மருந்தாகிறார்.இறுதியில், இசையும்,நினைவாற்றலும்,குடும்ப உறவுகளும் எவ்வாறு இணைகின்றன என்பதே படத்தின் மீதிக்கதை.
ஒய்.ஜி. மகேந்திரன் தனது நடிப்பில் முதிர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுவிட்டார்.
சுஹாசினி மணிரத்னம் வழக்கம் போல் தனது எதார்த்தமான நடிப்பில் அனைவரது மனதிலும் இடம் பிடித்து விட்டார்.
மற்றும் ராஜ் ஐயப்பா,ரம்யா பாண்டியன், சத்யராஜ்,சமுத்திரக்கனி,தலைவாசல் விஜய்,மதுவந்தி,தீனா ரித்விக்,பிரித்திகா என அனைவரும் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளனர்.
‘தேனிசை தென்றல்’ தேவா அவர்களின் இசையும்,சஞ்சய் பி எல் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
பாட்ஷா’,‘அண்ணாமலை’போன்ற மெகா ஹிட் அதிரடி மாஸ் கமர்ஷியல் படங்களை படைத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா எமோஷனல் கிளாசிக் படத்தையும் தன்னால் இயக்க முடியும் எனபதை சாருகேசி மூலம் நீருபித்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்,பாராட்டுகள்.
சாருகேசி எமோஷனல் நிறைந்த அழகான காவியம்.
