புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ மற்றும் மகேஷ் தீபிக்ஷா ஆகியோர் பள்ளி நண்பர்கள் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். அனாதையான மகேஷ் நன்றாக படிக்கும் மாணவன், அவனிடம் நன்றாக பழகுகிறார் தீபிக்ஷா .
டிட்டோவின்உறவினர் தீபிக்ஷா என்பதால் மகேஷ் தன் காதலை தீபிக்ஷாவிடம் தெரிவிக்க சொல்கிறார். இதனை அறியும் தீபிக்ஷா நட்பாக மட்டுமே மகேஷிடம் பழகினேன் காதலிக்கவில்லை என்பதை தெரிவித்து, டிட்டோவைதான் காதலிப்பதாக கூறுகிறார். இதனை கேட்கும் டிட்டோ மகேஷின் காதலுக்கு இடையூறாக இருக்க விரும்பாமல் நட்புக்காக தீபிக்ஷாவின் காதலை நிராகரிக்கிறார்.ப்ளஸ் டூ தேர்வு நடைபெற நன்றாக படிக்கும் மகேஷ் காதல் தோல்வியால் தேர்ச்சி பெறாமல் போகிறார். ஆனால் டிட்டோ தீபிக்ஷா மற்றும் அவரது நண்பர்கள் தேர்ச்சி பெற்று கல்லூரிக்கு செல்கிறார்கள்.கூலி வேலை செய்யும் மகேஷ் மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறார். இந்நிலையில் தீபிக்க்ஷா விற்க்கு திருமண நிச்சயம் ஆகிறது. இறுதியில் தீபிக்ஷா யாரை திருமணம் செய்து கொண்டார் அதன் பின் அவர் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
புதுமுகங்கள் டாக்டர்.டிட்டோ சூர்யாவாகவும் மற்றும் மகேஷ் சிவாவாகவும் பள்ளி, கல்லூரி, இளமை பருவ காலத்திற்கேற்ப தங்களுடைய நடை, உடை, பாவனையில் வேறுபடுத்தி காட்டி, தங்களின் முழு பங்களிப்பை கொடுத்து தேர்ந்த நடிகர்கள் போல் நடித்துள்ளனர்.
புதுமுக நடிகை தீபிக்ஷா சோகமான காட்சியில் அழகும் நடிப்பும் கலந்து கண் கலங்க செய்து விடுகிறார்.
மற்றும் சிம்ரன், சாம்ஸ், ஜாங்கிரி மதுமிதா மற்றும் திடியன், சாப்ளின் பாலு, மணி, லக்ஷ்மி, புஷ்பதா ஆகியோர் அவர்களின் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
லிவிங்ஸ்டன் மற்றும் பாலா பழனியப்பன் ஒளிப்பதிவும் டி.எஸ்.முரளிதரன் பாடல்களுக்கும் சிற்பி பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
முக்கோணக்காதலுடன்,நட்பு,பொறாமை, செண்டிமென்ட் கலந்து இன்றைய காதலர்களுக்கு 90களின் காதலின் வித்தியாசத்தை இந்த படத்தின் மூலம் ஆழமாக கொடுக்க முயற்சித்துள்ள இயக்குனர் சகாயநாதன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
செல்ல குட்டி ஒரு தலைக்காதலின் தாக்கம்.