கன்னிமாரா ரோட்டரி கிளப்

கன்னிமாரா ரோட்டரி கிளப் மற்றும் உமையாள் ஆச்சி சமூக சுகாதார மையம், அம்பத்தூர் தாலுக்காவில் அமைந்துள்ள அரக்கம்பாக்கத்தில் இணைந்து, இந்திய பல் மருத்துவ சங்கம் மற்றும் MN கண் மருத்துவமனையின் ஆதரவுடன் மிகச்சிறந்த பல்நோக்கு சுகாதார முகாமை நடத்தியது .
இதில் பொது சுகாதாரம், கண் , பல் பரிசோதனை, மனநலம், குழந்தை ஆரோக்கியம் மற்றும் பெண்களின் ஆரோக்கியம் குறித்த ஸ்க்ரீனிங் (Screening ) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த முகாமின் மொத்த 186 பயனாளிகளுக்கு மேல் கலந்து கொண்டனர் .

மேலும் குழந்தை மருத்துவத்தில் முக்கிய புகார்களாக மோசமான சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள், பெண்களின் ஆரோக்கியம்; கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகம் புற்றுநோய் பரிசோதனை ஆகியவை கண்டறியப்பட்டது .கண்புரை அறுவை சிகிச்சை,கண்ணாடி ஆலோசனை ,முன்தோல் குறுக்கம் ,RTH-21 ஆகிய சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த ஏற்பாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக Rtn. டாக்டர் சாய் கிருஷ்ணா, இயக்குனர் சமூக சேவை சுகாதாரம், ரோட்டரி மாவட்டம் 3232 மற்றும் மாவட்ட அதிகாரி Rtn. Dr.வெற்றிவேல், ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாரா தலைவர் Rtn. அக்க்ஷைய் மனோகரன் ஆகியோருடன், Rtn காஞ்சனா கான் தலைவர் சமூக சுகாதார ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாரா மற்றும் உறுப்பினர்கள். ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் கன்னிமாரா நிகழ்ச்சியை சிறப்பித்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து பயனாளிகளுக்கு எடுத்துரைத்தனர்…

 

செல்வி அம்பிகா மற்றும் பேராசிரியை ஜெயஸ்ரீ தலைமையிலான குழுவினர், உமையாள் ஆச்சி செவிலியர் கல்லூரியின் ஆசிரிய மற்றும் B.Sc(N) 2ஆம் ஆண்டு மாணவர்களின் திறமையான ஆதரவுடன் சுகாதார முகாமை நடத்தினார்கள்,.