நாயகன் சந்தோஷ் ஷோபன் அம்மா,அப்பா, அண்ணன்,அண்ணி என குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.வேலை கிடைக்காத காரணத்தால் வேலை தேடி சென்னைக்கு வருகிறார்.ஐடி நிறுவனத்திற்கு வேலை தேடி செல்லும் மானசாவை சந்தோஷ் சந்திக்க அவருக்காக தங்கும் விடுதி தேடி அலைகிறார்.தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் தான் தங்கியிருக்கும் வீட்டிலேயே தங்க வைக்கிறார்.இன்டீரியர் டிசைனிங் துறையில் முன்னேற நினைக்கும் சந்தோஷீக்கு மானசா உதவி செய்கிறார். இருவரும் லிவிங் டு கெதர் முறையில் ஒன்றாக வாழ்கிறார்கள்.இந்நிலையில் மானசாவின் அப்பா இவர்கள் காதலை ஏற்க மறுத்து வேறொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்.இந்நிலையில் மானசாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார். மருத்துவ மனையில் இருந்து சந்தோஷ் மானசாவை கேரளவிற்கு அழைத்துச் செல்கிறார்.சந்தோஷ்,மானசாவை கேரளவிற்கு அழைத்துச் செல்ல காரணம் என்ன இவர்களின் காதலை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டார்களா இல்லையா இருவருக்கும் திருமணம் நடந்ததா,இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
சந்தோஷ் சோபன் அனைத்து உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
மானசாவாரணாசி எதார்த்தமான நடிப்பபை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் யோகி பாபு,லிவிங்ஸ்டன்,ஸ்ரீ ரஞ்சனி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
தினேஷ் புருசோத்தமன் ஒளிப்பதிவும்,ஆதித்யா ரவீந்திரனின் இசையும் படத்திற்கு பலம்.
ஆரம்பம் முதல் இறுதிவரை சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து மிகவும் சிறப்பாக இயக்கி இருக்கும் இயக்குனர் அஷ்வின் சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டுகள்.
‘கப்புள் ஃபிரண்ட்லி’எதார்த்தம் நிறைந்த கதை.
