டியர் விமர்சனம்


கதைப்படி ரோகினிக்கு சரவணன் காளி வெங்கட் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இரண்டு மகன்கள்.கண்டிப்பு நிறைந்த காளி வெங்கட் டுக்கு திருமணமாகி ஒரு மகனும் இருக்கிறார்.இளைய மகன் ஜி.வி.பிரகாஷ் செய்தி வாசிப்பாளர்,பிரபல தனியார் தொலைக்காட்சியில் சேர்ந்து நிதி அமைச்சர் மற்றும் பல பிரபலங்களை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற எதிர்கால லட்சிய கனவுடன் வாழ்கிறார்.காளிவெங்கட்டும் தாதாய்ரோகினியும் ஜி.வி.பிரகாஷ்க்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்து குன்னூருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ்ஷை பெண் பார்க்க செல்கிறார்கள்.ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு குறட்டை பிரச்சனை இருக்க, அதனால் திருமணம் தள்ளிப் போவதால் தாயின் ஆலோசனைப்படி இந்த பிரச்சனையை மறைத்து  திருமணம் முடிக்க நினைக்கின்றனர். இந்த சமயத்தில் ஜி.வி
பிரகாஷை பார்த்தவுடன் ஐஸ்வர்யா ராஜேஷீக்கு பிடித்துப் போக திருமணம் தடபுடலாக நடந்து முடிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு குறட்டை விடும் பழக்கம் இருக்கிறது என்பதை முதலிரவு அன்று ஜிவிக்கு தெரிய வர பிரச்சனை ஆரம்பமாகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷும் ஜிவியும் இந்த குறட்டையை சமாளிக்க புதுமையான வழிகளைக் தேடுகிறார்கள். இதன் விளைவாக தூக்கமின்றி இருவரும் தவிக்க, முக்கியமாக ஜிவி பிரபல தனியார் சேனலில் வேலை கிடைத்தும் நேர்காணல் செய்ய முடியாமல் வேலையில் தடை ஏற்படுகிறது. தன் லட்சிய கனவு சிதைந்ததால் கோபமடைந்த ஜிவி ஐஸ்வர்யா விடம் விவாகரத்து கேட்கிறார். இதற்கு சம்மதிக்காத ஐஸ்வர்யா ஜிவியை சமாதானப்படுத்த பார்க்கிறார். இறுதியில் அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு சேர்ந்து தீர்வு கண்டார்களா இருவரும் விவாகரத்து பெற்றார்களா அல்லது சேர்ந்து வாழ்ந்து குறட்டை பிரச்சனையை சமாளித்தார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
அர்ஜுனாக ஜி.வி.பிரகாஷ் அவரது நடிப்பில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் தெரிகின்றது.
தீபிகாவாக ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டையால் அவதிப்படும் பெண்ணாக தனது நடிப்பு திறமையை மீண்டும் நிரூபித்துள்ளார்.
படத்தின் ஏனைய கதாபாத்திரங்களான காளி வெங்கட், ரோகிணி, நந்தினி,கல்பனா, தலைவாசல் விஜய்,சண்முகம்,லட்சுமி, இளவரசு ரங்கராஜ்,கீதா கைலாசம்,வசந்தி,ஜெ.கமலேஷ் , சந்தோஷ்,அப்தூல் லீ பாண்டா, மகாலக்ஷ்மி சுதர்சனன், ஜெனிஃபர் அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும், ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
குடும்பங்களுக்குள் ஏற்படும் சிறு பிரச்சனை கள் கூட பெரிதாக வளர்ந்து விடாமல் அதை எப்படி சமாளித்து சரிசெய்ய வேண்டும் என்பதனை அழகாகவும் அழுத்தமாகவும் கூறியிருக்கும் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
டியர் புதுமணத் தம்பதிகளுக்கு புதுமையான பாடம்.