இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்கள் அரிசி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டார்…*

*இயக்குனர் இமயம் திரு பாரதிராஜா அவர்கள் அரிசி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டார்…*

*இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கதையின் நாயகனாக இளையராஜா இசையில் உருவாகும் திரைப்படம் “அரிசி” மோனிகா புரடக் ஷன்ஸ் சார்பில் P.சண்முகம் தயாரிக்கிறார்*

இதில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
தமிழ்நாடு மாநிலச்செயலாளர்தோழர் இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார்.  அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர்,
கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ்,
மகிமை ராஜ்,வையகன்,
அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

*இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்*

ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார்.

அசோக் சார்லஸ் எடிட்டிங் செய்கிறார்.

சேது ரமேஷ் அரங்கம் அமைக்கிறார்.

மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார்.

S. A.விஜயகுமார்
கதை,திரைக்கதை,வசனம்  எழுதி இயக்குகிறார்.

கதை சுருக்கம்:

அரிசி படம் முழுக்க முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம்.
அரிசி என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல!
மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த *”அரிசி”* படத்தின் சிறப்பு!

இப்படத்தில்  விவசாயியாக நடித்திருக்கும்
தோழர்
இரா. முத்தரசன்
அவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.   இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது…

விரைவில் இத்திரைப்படம் திரையில் வெளியாகும்…