இ-மெயில் விமர்சனம்

நாயகி ராகினி திவேதியின் தாய் திடீரென்று இறந்து விட வீட்டில் வேலை செய்யும் ஆட்களால் ஏமாற்றப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்கிறார்.கஷ்டப்பட்டு படித்து முடித்தாலும் நல்ல வேலை கிடைக்காமல்; வீட்டு மனைகள் விற்கும் மனோபாலாவின் அலுவலகத்தில் விருப்பம் இல்லாமல் வேலை செய்ய அதிலும் பிரச்சனை வந்து வேலையை விட நேர்கிறது. சிறு வயது முதல் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமுள்ள அவருக்கு ஒரு நாள் டை கேம் என் ஆன்லைன் கேமில் விளையாட ஆரம்பிக்கிறார். அதில் வரும் மூன்று நபர்களில் யார் இறப்பார்கள் என்று சரியாக கணித்தால் பணம் கிடைக்கும். என்பதையறிந்து விளையாட தொடங்கிறார். அந்த விளையாட்டின் மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைக்க ஆரம்பிக்க தீவிரமாக விளையாடுகிறார். இதனிடையே நாயகன் அசோக் குமாரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் ஆன் லைன் விளையாட்டால் பிரச்சனை ஏற்படுகிறது. முதலில் பத்து லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்து தரவேண்டும் என்ற நிபத்தனை கட்டாயத்தில் தள்ளப்படுகிறார். இந்த விளையாட்டு பிரச்சனையில் இருந்து தன் மனைவியைக் காப்பாற்ற முயலும் அசோக் உயிருக்கு ஆபத்தும், தன் நெருங்கிய தோழிகளுக்கும் இன்னல்கள் ஏற்படுகிறது, இதனால் நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார் அதை எப்படி செய்கிறார் அந்த பிரச்சனையில் இருந்து எப்படி வெளியில் வருகிறார் இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் என்பதை சொல்வதே மீதிக்கதை.
நாயகன் அசோக் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தைகச்சிதமாக செய்துள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
கதையின் நாயகியாக ராகினி திவேதி காதல் காட்சிகளானாலும் அதிரடி காட்சிகளானாலும் சரி திறமையாக செய்துள்ளார்.
படத்தின் ஏனைய கதாபாத்திரங்களான ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், பெல்லி முரளி பார்க்,அக்ஷய் ராஜ், வனிதா,ஆரஞ்சு மிட்டாய் பிரபா,ரத்னா, ஷைலு,ஸ்வேதா,தேஜஸ்வினி,தியா, அஜித் குமார் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
கவாஸ்கர் அவினாஷ் இசையும் ஜூபினின் பின்னணி இசையும் படத்தின் வேகத்தை அதிகரித்துள்ளது.
படத்தை விருவிருப்பாகவும் வேகம் குறையாமலும் எடுத்திருக்கும் இயக்குனர் எஸ்.ஆர்.ராஜனுக்கு பாராட்டுக்கள்.
இமெயில் ஆபத்தான விளையாட்டு விபரீதத்தை தரும் என்பதை தெளிவாக சொல்லியுள்ளது.