நேர்மையான,துணிச்சலான மற்றும் புத்திசாலித்தனமான ஒரு உதவி ஆணையராக உள்ளார் நவீன் சந்திரா. தனது புலனாய்வு நிபுணத்துவத்தை பயன்படுத்தி காவல்துறை மிகவும் சவாலான குற்ற வழக்குகளில் சிலவற்றைத் தீர்க்க மிகவும் உதவியுள்ளார்.
இந்நிலையில்,எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாமல் எரிந்த நிலையில் தொடர்ச்சியாக ஒரே மாதியாக கொலைகள் நடந்துவருகிறது.இந்த வழக்கை கையாளும் ஷஷாங்க் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விடுகிறார்.அவருக்கு பதிலாக இந்த புதிய தொடர் கொலை வழக்கு விசாரணைக்கு நவீன் சந்திரா நியமிக்கப்படுகிறார்.அவருக்கு உதவியாக திலீபன் பணி அமர்த்தப்படுகிறார்.வழக்கு விசாரணையை நவீன் சந்திரா பெற்ற பிறகும்,கொலையாளி எந்த தடயத்தையும் விட்டுச் செல்லாமல் எரிந்த நிலையில் தொடர்ச்சியாக ஒரே மாதியாக கொலைகள் நடத்துகிறான். கடினமான சவாலை நவீன் சந்திரா எதிர்கொள்கிறார்,ஆனால் இந்த தொடர் கொலைகாரன்,அவரது நடவடிக்கைகள் தர்க்கத்தை மீறுகின்றன, விசாரணையின் ஒரு பகுதியாக நவீன் சந்திரா முறையாக துப்புகளை ஒன்றிணைத்து,சந்தேகத்திற்கிடமான ஒரு தம்பதியிடம் விசாரிக்கிறார்,அவர்களது இரட்டை சகோதரர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக தெரியவருகிறது. உண்மையில் இந்தக் கொலைகளை எல்லாம் யார் செய்கிறார்கள் சைக்கோ கொலையாளிக்கும் இறந்தவர்களுக்கும் என்ன தொடர்பு ஏன் இந்த சைக்கோ கொலையாளி இரட்டையர்களில் ஒருவரை மட்டும் கொல்கிறான் நவீன் சந்திரா சைக்கோ கொலையாளியைப் பிடித்தாரா என்பதே மீதிக்கதை.
அரவிந்தன் கதாபாத்திரத்தில் நவீன் சந்திரா ஒரு தீவிர போலீஸ் அதிகாரியாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
நாயகி ரியா ஹரி தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
திலீபன்,ஷஷாங்,அபிராமி,ஆடுகளம் நரேன்,அர்ஜய்,ரித்விகா,ரவி வர்மா,கிரிதி உட்பட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவும், இமானின் இசையும் படத்திற்கு பலம்.
இரட்டையர்களை வைத்து புதுமையான கதையை எதிர்பாராத திருப்பங்களுடன் வித்தியாசமான திரைக்கதையுடன்,ஒரு சிறந்த திரில்லர் படமாக இயக்கி உள்ள இயக்குனர் லோகேஷ் அஜ்லஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.
லெவன் புது கதைக்களம் புதிய அனுபவத்தைத் தரும் க்ரைம் த்ரில்லர்.
