ஃபைண்டர்’ விமர்சனம்


கடலில் மீன்பிடித் தொழிலைச் செய்து மனைவி மகளுடன் கிடைக்கும் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் சார்லி
இந்நிலையில் சார்லி தான் வாழும் ஏரியா மக்களிடம் சீட்டுப் பணம் வாங்கி ஏலச்சீட்டு நடத்தி வருகிறார்.
ஏலச்சீட்டு பணத்தை வாங்கியவர் ஒரு நாள் சார்லியை ஏமாற்றி விட்டு பணத்தை எடுத்து கொண்டு ஓடி விடுகிறார்.
இதனால் பணத்தை கட்டியவர்கள் அனைவரும் பணத்தை திருப்பி கேட்கின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை திரட்ட அவருக்கு வேறு வழி தெரியாமல் தனது உறவினர் செண்ட்ராயன் மூலம் பணத்திற்காக தான்செய்யாத குற்றத்தை ஒத்துக்கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார்.
சில மாதங்களில் வெளியே வந்து விடலாம் என்று நினைத்து ஜெயிலுக்கு செல்லும் சார்லிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கதையின் நாயகன் வினோத் ராஜேந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘ஃபைண்டர்’ என்ற துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனம் மூலம்,குற்றம் செய்யாமல் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகளான அப்பாவிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரிடம் செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கிடைத்து வெளியில் வர வழி தெரியாமல் அதை அனுபவித்துக் கொண்டிருக்கும் சார்லியின் வழக்கு வருகிறது.
இதனையடுத்து சார்லியின் வழக்கை கையில் எடுக்கும் நாயகன் வினோத் ராஜேந்திரன் அந்த வழக்கை எப்படி திறமையாக கையாண்டார்
நிரபராதியான சார்லியை வெளியில் கொண்டு வந்தாரா இல்லையா என்பதே’ஃபைண்டர்’ படத்தின் மீதிக்கதை.
சார்லி தனது நடிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கதைக்கு பலமாக தனது நடிப்பு திறமையை மீண்டும் நிறுபித்துள்ளார்.
படத்தின் மற்ற கலைஞர்களான நிழல்கள் ரவி, செண்ட்ராயன், நாயகனுக்கு உதவியாளராக வரும் தாரணி,மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து புது முகங்களும் தங்களது பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருகின்றனர்.
நாயகன் வினோத் ராஜேந்திரன் தனது இயல்பான நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்புகின்றார்.
இயக்குனரும் இவரே என்பதனால் கதைக்கு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து அழுத்தமான கருத்தைக் கூறி அனைவரும் பாராட்டும்படி உருவாக்கியிருக்கிறார் அவருக்கு பாராட்டுகள்.
சூர்ய பிரசாத்தின் இசையும்,பிராசந்த் வெள்ளிங்கிரியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
ஃபைண்டர் சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர்.