காந்தி கண்ணாடி விமர்சனம்

சென்னையில் செக்யூரிட்டியாக பணியாற்றிவரும் பாலாஜி சக்திவேல் அர்ச்சனா தம்பதிகளுக்கு வாரிசு இல்லை. வறுமையில் வாடும் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை நடத்துகிறார்கள். இதற்கிடையில் இந்த தம்பதிகள் ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வில் கலந்து கொண்டனர். அப்போது அர்ச்சனாவின் மனதிலும் இது போன்ற ஆசை ஏற்பட,அதை பாலாஜி சக்திவேலிடம் சொல்கிறார்.60வது திருமணத்தை நடத்தி வைக்க தங்களுக்கு பிள்ளைகள் இல்லை என வருத்தம் கொள்கிறார்கள்.ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாலாஜி சக்திவேல் தன் காதலி அர்ச்சனாவை மணம் முடிக்க சொத்து மற்றும் சொந்தங்களை விட்டு விட்டு சென்னைக்கு ஓடி வந்து திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் தம்பதிகள். தன் மனைவியின் 60வது திருமணத்தை சிறப்பாக நடத்தி மனைவியின் ஏக்கத்தை நிறைவேற்ற முடிவெடுக்கும் பாலாஜி சக்திவேல் அதற்கான விழா ஏற்பாடு நிறுவனம் வைத்திருக்கும் பாலாவை அணுகி 60வது திருமணம் நடத்த எவ்வளவு செலவாகும் என்று கேட்கிறார். ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனிக்கு தேவையான பல சாதனங்களை வாங்க பணத்தேவையிலிருக்கும் பாலா பாலாஜி சக்திவேல் கேட்டுக்கொண்டபடி 60வது திருமணம் சிறப்பாக நடத்த 52 லட்சம் தேவை என பொய் கணக்கு கூறுகிறார். அதே நேரத்தில் ஒரு சாதாரண செக்ரியூட்டி வேலை பார்க்கும் இவருக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைக்கும் என சந்தேகப்படுகிறார்.தனது சொத்து பத்திரத்தை பாலாஜி சக்திவேல் அவர்களிடம் கொடுக்கும் போது அவர் ஒரு ஜமீன்தார் என்பது இவர்களுக்கு தெரிய வருகிறது. அந்த சொத்துக்களை விற்கலாம் என பாலா மற்றும் அவர்களது குழுவை உடன் அழைத்து செல்கிறார் பாலாஜி சக்திவேல்.ஊரில் இருக்கும் பல கோடி மதிப்புள்ள சொத்தை 1 கோடிக்கு விற்று விட்டு பணத்துடன் சென்னை வருகிறார்கள். இதற்கிடையில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமலுக்கு வருகிறது. பாலாஜி சக்திவேலிடம் இருக்கும் பணம் அனைத்தும் செல்லாமல் போய்விடுகிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.இயக்குனர் பாலாஜி சக்திவேல்,ஊர்வசி அர்ச்சனா உணர்ச்சிபூர்வமான நடிப்பினை வழங்கி நடித்துள்ளனர்.
பாலா தனது முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் நமிதா கிருஷ்ணமூர்த்தி,மதன், அமுதவாணன்,நிகிலா,அபிலாஷ்,ஜீவா, ரியா,மகாநதி ஷன்ஹர்,முருகானந்தம், டி.எஸ்.ஆர்,ஆகாஷ்,மார்ஷல்,மனோஜ், ஆராத்யா,கேம் சூரி,வசுதாரா,ரமேஷ் கண்ணா,டாக்டர் வித்யா,ஆத்மா,எட்வின், அபிஷேக்,நேமி,புதுப்பேட்டை சுரேஷ் அனைத்து துணை கதாபாத்திரங்களும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே ராஜா அவர்களின் ஒளிப்பதிவும் இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் அவர்களது இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.
இயக்குனர் ஷெரீஃப் மிகவும் வித்தியாசமான கதையை கமடி கலந்து சிறப்பாக கொடுத்துள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
காந்தி கண்ணாடி சென்டிமென்ட் நிறைந்த பவர் புல் கண்ணாடி.