கருடன்’ விமர்சனம்

சிறுவயது முதல் சசிகுமாரும்,உன்னி முகுந்தனும் இருந்தபோது பழக்கமாகும் ஆதரவற்ற சிறுவன் சூரி அவர்களுடனே வளர்கிறார்.
சிறுவனாக இருக்கும்போதே உன்னி முகுந்தனின் உயிரைக் காப்பாற்றி அவர் வீட்டில் அவருடைய பாட்டி வடிவுக்கரசி ஆதரவுடன் உன்னி முகுந்தனுக்கு விஸ்வாசமான வேலைக்காரராகவும் அதே சமயம்,சசிகுமாரின் குடும்பத்தில் உறவாக வாழ்ந்து வருகிறார் சூரி .
இப்படி பட்ட நேரத்தில் உயிர் நண்பன் சசிகுமாரே உன்னி முகுந்தனை அடிக்க முயன்றாலும் அவரையே அடிக்கக் கை ஓங்கும் அளவுக்கு சூரியின் விசுவாசம் அளவுக்கு மீறி நிற்கிறது.
இந்த நிலையில்,அமைச்சர் ஆர் வி உதயகுமாரின் திட்டப்படி ஓடாத தியேட்டர் உரிமையாளர் மைம் கோபியின் சூழ்ச்சியினால் உயிர் நண்பன் உன்னி முகுந்தன் சசிகுமாருக்கு துரோகம் செய்ய முயற்சிக்கிறார் இது தெரிந்த உன்னி முகுந்தன் ஒரு கட்டத்தில் கை குழந்தையுடன் தன்னை பார்க்க வரும் சசிகுமாரை வெட்டி சாய்க்கிறார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தில் ஒருவராக உறவு பாராட்டி பாசம் காட்டிய சசிகுமாரை கொலை செய்தவர்களை சூரி பழி வாங்கினாரா விஸ்வாசத்திற்காக தன்னை வாழ வைத்த முதலாளியான உன்னி முகுந்தனுக்கு பாதுகாப்பாக அவரது பக்க துணையாக நின்றாரா என்பதே ‘கருடன்’படத்தின் மீதிக்கதை.
சூரி சொக்கன் என்ற அழுத்தமான கதாபாத்திரத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக நடித்துள்ளார்.
சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் இருவரும் கதையுடன் இணைந்து பயணித்து படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளனர்.
நாயகி ரேவதி ஷர்மா,சசிகுமாரின் மனைவியாக வரும் ஷிவதா,உன்னி முகுந்தனின் மனைவி ரோஷினி ஹரிப்பிரியன்,முத்துராமன்,துஷ்யந்த் ஜெயபிரகாஷ்,பிரிகிடாசகா,வடிவுக்கரசி,இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், மைம் கோபி மற்ற கதாபாத்திரங்கள் என அனைவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையும்
ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.
நட்பு ,விஸ்வாசம்,துரோகம் இவை மூன்றையும் திரைக்கதையுடன் இணைத்து அனைவரும் ரசிக்க வைக்கும் படமாக இயக்கியுள்ள இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
கருடன் நட்பு,நம்பிக்கை,அன்பு,துரோகம் இவைகளின் பிரதிபலிப்பு.