முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை ஆரம்பமாகிறது விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமிக்கு தம்பதிக்கு குழந்தை பிறந்த பிறகும் குஸ்தி விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு அவரது கணவர் விஷ்ணு விஷால் முழு ஆதரவாக இருக்கிறார்.வீட்டையும், குழந்தையையும் கவனித்துக் கொண்டு மனைவியின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடும் அவர், ஐஸ்வர்யா லட்சுமியை தேசிய அளவிலான போட்டிக்கு தயார்படுத்துகிறார். இதற்கிடையே,அவர்களது மகளின் படிப்பு மற்றும் எதிர்காலம் தொடர்பாக கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.மகளையும் சிறந்த குஸ்தி வீராங்கனையாக மாற்ற வேண்டும் என்று ஐஸ்வர்யா லட்சுமி நினைக்க,குழந்தையின் விருப்பத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விஷ்ணு விஷால் கருதுகிறார்.இந்த சிறிய கருத்து வேறுபாடு குடும்ப வாழ்க்கையில் பெரிய பிளவை ஏற்படுத்தி, விவாகரத்து வரை செல்லும் சூழ்நிலையை உருவாக்குகிறது.இறுதியில் விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் இணைந்தார்களா குடும்பமும் கனவும் இரண்டையும் காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
விஷ்ணு விஷால், மனைவியின் வெற்றிக்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கணவராக மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா லட்சுமி,முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் இன்னும் பலமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
மற்றும் குழந்தை நட்சத்திரம் சாரா,கருணாஸ்,மோக்ஷா,முனிஷ்காந்த், காளி வெங்கட்,கருணாகரன்,லிஸி ஆண்டனி,கஜராஜ்,ஸ்ரீஜா ரவி ஆகியோர் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
சிறப்பு தோற்றத்தில் வரும் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு சிறப்பாக நடித்துள்ளனர்.
கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவும்,ஷேன் ரோல்டன் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
படத்த்கின் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டும் அல்லாமல் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் செல்ல ஐயாவு அவர்களுக்கு பாராட்டுகள்.
“கட்டா குஸ்தி 2”ஆரம்பம் முதல் இறுதிவரை குடும்பத்துடன் ரசித்து மகிழலாம்.
