ரங்கராஜ் தனது பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி மனைவி ஸ்ருதி நாராயணனை நள்ளிரவில் ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது ரங்கராஜ் கொலைவெறி கொண்ட ஒரு சில மர்மமனிதர்களால் தாக்கப்பட, அவர் தனது மனைவியை காப்பாற்றி அருகிலுள்ள ஒரு பிரசவம் பார்க்கும் மருத்துவச்சியிடம் அழைத்துச் செல்கிறார். அங்கு மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்க அதனையறிந்த பின் தாக்குதலால் உயிருக்கு போராடும் ரங்கராஜ் இறந்து விடுகிறார். விதவையான ஸ்ருதி நாராயணன் மீன் விற்று தனது குழந்தையை வளர்க்கும் போது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் போலீஸை துணிச்சலுடன் எதிர்க்கிறார். போலீஸ் அவளை அடித்து அவமானப்படுத்த அதனால் கோபமடையும் ஸ்ருதி நாராயணன் போலீஸ்காரரைக் கொலை செய்ய முயற்சிக்கும் போது குத்துபட்டு இறந்து விடுகிறார்.இளம் வயதிலேயே தனது தாயையும் தந்தையையும் இழந்த ரங்கராஜ், தனது தாயின் விருப்பப்படி நேர்மையான காவல் அதிகாரியாகி,மக்களுக்கு நல்லது செய்கிறார். அனாதையான நான்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு, அனாதை பெண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.ஆனால்அவரது நேர்மைக்கு பல வழிகளில் தொடர்ந்து சோதனைகள் ஏற்படுகிறது.அவரது மனைவி திடீரென்று கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்.காதல் மனைவியின் மரணம் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தி பித்து பிடித்தவர் போல் இருக்கிறார் ரங்கராஜ்.அதன் பின் மனைவியை கொன்றது யார் என்ற உண்மை தெரிய வருகிறது.இறுதியில் ரங்கராஜ் கொலையாளியை கண்டுபிடித்தாரா மனைவியை கொலை செய்ய காரணம் என்னகொலையாளிக்கும் தனது தந்தைக்கும் இருந்த முன்விரோதம் என்ன கொலையாளிக்கு எப்படி தண்டனை கொடுத்தார் ரங்கராஜ் எதிரிகளிடமிருந்து தன் மகளை காப்பாற்ற முடிந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
கிராமத்து விவசாயி மற்றும் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என இரு வேறு பரிமாணங்களில் ரங்கராஜ் முதல் படம் என்று தெரியாத அளவிற்கு தனது முத்திரையை பதித்துள்ளார்.
ஸ்ருதி நாராயணன் வருவது சில காட்சிகளே தான் என்றாலும் உணர்ச்சிகள் நிறைந்து நிறைவாக செய்துள்ளார்.மற்றும் நான்ஸி
பிரவீன் மஞ்ச்ரேக்கர்.டெல்லி கணேஷ்,சாய் தீனா,பிர்லா போஸ்,ஸ்ரீலேகா,அறந்தாங்கி நிஷா உட்பட மற்றும் பலர் சிறப்பாக தங்களது பணிகளை செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் அவர்களின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்க்ளின் அவர்களின் இசையும் படத்திற்கு பலம்.பல தரப்பட்ட சமூக அக்கறை கலந்த கோணத்துடன்
படத்தை எழுதி இயக்கி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ரங்கராஜின் கடும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.
கட்ஸ் சமூக அக்கறையுள்ள அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம்.
