ஹாட்ஸ்பாட் 2 மச் விமர்சனம்

மூன்று வெவ்வேறு கதைக்களங்களைக் கையாண்டு உணர்ச்சிகரமான திரைக்கதை அமைத்து நகைச்சுவை தருணங்களுடன் காட்சிப்படுத்தி படத்தின் இரண்டு பாகங்களையும் தடையின்றி இணைந்து இருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்.
முதல் பாகத்தில் பிரிகிடா சாகாவும் விக்னேஷ் கார்த்திக்கும் காதலர்களாக இருந்து பின்னர் கணவன் மனைவியாக மாறினர்.இந்தத் தொடர்ச்சி அவர்களின் உறவில் ஒரு பெரிய திருப்பத்தை ஏற்ப்படுத்துகிறது.இதனைத் தொடர்ந்து தனது மனைவி மதுமிதாவின் தோழி பிரியா பவானிசங்கரை தயாரிப்பாளரும் தனது மாமனருமான கே.ஜே. பாலமணிமார்பனிடம் கதை சொல்ல அனுப்புகிறார்.பிரியா தயாரிப்பாளரிடம் சமூகத்தில் நிலவும் அழுத்தமான மற்றும் சமூகப் பிரச்சினைகளைச் சித்தரிக்கும் மூன்று வெவ்வேறு கதைகளை விவரிக்கிறார்.முதல் கதையானது “ராசா” மற்றும் “தாதா”, இருவரின் வெறித்தனமான ரசிகர்களான ஆதித்யா பாஸ்கர் மற்றும் விஜே ரக்ஷன் பற்றியது.“ராசா” மற்றும் “தாதா” இருவருடைய படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் நிலையில் இவர்களுடைய ரசிகர்கள் போட்டி போட்டு கட்டவுட் வைக்க ஏற்பாடு செய்யும் நிலையில் மர்ப நபர் ஒருவர், தாதா ரசிகன் விஜே ரக்ஷன் அப்பா அம்மா, மற்றும் ராசா ரசிகன் ஆதித்யா பாஸ்கர் மனைவி ஆகியோரை கடத்துகிறார்.பின் இருவரிடமும் தொடர்பு கொண்டு அவர்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் அந்த இரண்டு நடிகர்களும் தன்னிடம் கான்ஃபரன்ஸ் காலில் பேசவேண்டும். அப்படி அவர்கள் இருவரும் தன்னிடம் பேசவில்லை என்றால் கடத்தி வைத்துள்ள அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். யார் இந்த மர்ம நபர் ஏன் எதற்காக அந்த நிபந்தனை வைத்தார் என்பதே முதல் கதை.
இரண்டாவது கதையானது பாரம்பரியமான மற்றும் ஒழுக்கமான ஓய்வு பெற்ற தந்தை தம்பி ராமையா அவரது மகளான சஞ்சனா திவாரி வெளிநாட்டிற்கு போய் படித்து முடித்து நாடு திரும்பும் போது வெளிநாட்டு நாகரிகத்தின் உச்சத்தில் ஷார்ட்ஸ் மற்றும் டாப்களில் கவர்ச்சியான உடை அணிந்து வருகிறாள் அவளது விருப்ப சுதந்திரம் குறித்த வாதங்களுடன் வயதில் பெரியவர்கள் என்று பாராமல் ஆணவத்துடன் தனது கருத்தை வெளிப்படுத்துகிறாள். அவளது செயல்பாடுகளை கண்டு அதிர்ந்து போன தந்தை தம்பிராமையா வேதனையுடன் அவளது பிறந்தநாளுக்காக காத்துக்கொண்டு இருந்தநிலையில்.மகள் பிறந்தநாளன்று அவர் ஒரு பனியன் மற்றும் உள்ளாடைகளுடன் தோன்றி,அவளது சொந்த தர்க்கத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். இந்த சம்பவம் அவரது மகளின் விருப்ப சுதந்திரத்தை எப்படி மாற்றியது என்பதே இரண்டாவது கதை.
மூன்றாவது கதையானது இன்றைய காலகட்டத்தில் வாழும் ஒரு ஓவியக்கலைஞன் அஸ்வின் குமார் எதிர்காலத்தில் 2050 ல் இருக்கும் ஒரு பெண்ணைக் காதலிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.அஸ்வின்குமார் அறையில் இரண்டு நண்பர்களுடன் வசிக்கிறார். ஒருவர் ஜிம் பயிற்சியாளர், மற்றொருவர் ஒரு குடிகாரர்.அஸ்வின்குமார் தனது மொபைல் போனில் புதிய சிம் கார்டை பெருத்தி அதை ஆக்டிவேட் செய்ய டயல் செய்யும் போது2050-ல் இருக்கும் பவானி ஸ்ரீயுடன் தொடர்பு ஏற்படுகிறது. அப்படியே அந்த தெடர்பு காதலாக மாறுகிறது.2050-ல் சிவகார்த்திகேயன் முதலமைச்சர், திருச்சி புதிய தலைநகரம் என்ற நிலையில், நித்யா டைம் டிராவல் செய்து நிகழ்காலத்திற்கு திரும்பி வந்து தனது காதலனை கரம் பிடிக்க நினைக்கும் போது,அஸ்வின்குமாருக்கு திருமணமாகி தனது மனைவி குழந்தை பெற்றெடுக்கும் போது, காதலர்களின் வாழ்க்கையில் ஒரு சிக்கலான உறவை வெளிப்படுத்துகிறது. அது என்ன என்பது தான் மூன்றாவது கதை.
தயாரிப்பாளரின் மருமகனுடன் சேர்ந்து தனது சொந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்தி பிரியா பவானிசங்கர் இந்த கதைக்களத்தை ஒருங்கிணைத்து வழிநடத்த என்ன காரணம் என்பதை கதையின் இறுதியில் ஒரு அதிரடியான முடிவுடன் சொல்லப்படுவதே மீதிக்கதை.
தம்பி ராமையா,எம்.எஸ். பாஸ்கர்,பிரியா பவானி சங்கர்,அஸ்வின் குமார்,விஜே ரக்ஷன்,பவானி ஸ்ரீ,சஞ்சனா திவாரி, ஆதித்யா பாஸ்கர்,பிரிகிடா சாகா, விக்னேஷ் கார்த்திக்,கே.ஜே. பாலமணிமார்பன் ஆகியோர் அனைவரும் வேவ்வேறு கதைகளில்,தங்களது பங்களிப்பை மிகவும் சிறப்பான முறையில் வழங்கியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் ரவி – ஜோசப் பால் ஒளிப்பதிவும்
இசையமைப்பாளர் சதிஷ் ரகுநாதன் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
மூன்று வெவ்வேறு கதைக்களங்களைக் நேர்த்தியாக திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஹாட் ஸ்பாட் 2 மச் ஹாட் அதிகமான பல உண்மைகளை உணர்த்தும் அனைவரும் காணவேண்டிய கதை.