’இதயம் முரளி’   விமர்சனம்

அமெரிக்காவில் வசித்து வரும் நாயகன் அதர்வாவின் திருமண ஏற்பாடுகளை அவரது மாமா நட்டி தீவிரமாக செய்து வருகிறார். திருமணத்திற்கு முந்தைய நாள் தனது நண்பர்களுடன் விமானத்தில் இந்தியா திரும்பும் அதர்வா அதே விமானத்தில் பயணிக்கும் பகத் பாசிலை எதிர்பாராத விதமாக சந்திக்கிறார்.இருவரும் உரையாடத் தொடங்க தனது வாழ்க்கையில் நடந்த காதல் கதையை பகத் பாசிலிடம் அதர்வா சொல்லத் தொடங்குகிறார்.திருச்சியில் பள்ளிப்  பருவத்தில் டியூஷனில் ப்ரீத்தி முகுந்தனை முதன்முதலாகப் பார்க்கும் அதர்வா அவர்மீது காதல் கொள்கிறார். டியூஷன் சென்டர் டென்னிஸ் மைதானம் என ப்ரீத்தி செல்லும் இடமெல்லாம் அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து தனது காதலை மனதிற்குள் வளர்த்துக் கொண்டே இருக்கிறார்.ஒருநாள் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அதர்வாவை வீட்டிற்கு அழைக்கிறார் ப்ரீத்தி அங்கு சென்று தனது காதலை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கும் அதர்வாவுக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.ப்ரீத்தி இரட்டைப் பிறவி சகோதரிகளில் ஒருவர் என்பதும், இருவரும் ஒரே மாதிரி தோற்றமளிப்பதால் தான் காதலித்தது யாரை என்றே தெரியாமல் குழப்பமடைகிறார்.அந்தக் குழப்பத்தில் சொல்ல நினைத்த காதலை சொல்லமாலேயே அங்கிருந்து செல்கிறார்.
பின்னர் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும் அதர்வா மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் கயாடு லோஹரைப் பார்த்ததும் மீண்டும் காதலில் விழுகிறார். அவருடன் நட்பாகப் பேசி நெருக்கமாகப் பழகினாலும் தனது மனதில் இருக்கும் காதலை வெளிப்படுத்தும் துணிச்சல் மட்டும் வரவில்லை.கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கயாடு தனது சொந்த ஊருக்குப் புறப்படுகிறார்.அவரை வழியனுப்புவதற்காக ரயில் நிலையத்துக்குச் செல்லும் அதர்வா, இந்த முறையாவது தனது காதலைச் சொல்லிவிட வேண்டும் என்று உறுதியுடன் செல்கிறார்.ஆனால் அந்தத் தருணத்திலும் அவரது தயக்கமே வெற்றி பெறுகிறது. காதலை மனதிற்குள் பூட்டி வைத்தபடியே கயாடுவை வழியனுப்பி வைக்கிறார்.
இறுதியில் நாயகன் அதர்வா மாமா நட்டி பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்தாரா இல்லையா பகத் பாசில் திருணத்தை நிறுத்தினரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அதர்வா முரளி, தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது.
நாயகிகளாக ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இருவரும் தங்களது தோற்றம் மற்றும் இயல்பான வெளிப்பாடுகளால் கவனம் ஈர்க்கிறார்கள்.
மற்றும நட்டி நடராஜ்,பகத் பாசில்,தமன் எஸ்.,நிஹாரிகா,ரக்‌ஷன்,டிராவிட், ஏஞ்சலினா,அஞ்சு குரியன்,சுதாகர், யாஷாஸ்ரீ ஆகிய அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையும், மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும் பலம்.
கதையின் நாயகனின் பல காதல் தோல்விகளையும்,அவற்றின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் மையமாகக் கொண்டு சிறந்த திரைக்கதையை உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
’இதயம் முரளி’காதலை வெளிப்படுத்தாமல் இருப்பதால் வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் சிக்கல்களை சித்தரிக்கிறது.