
இந்திய சாதனையாளர் விருதுகள் 2025 — பல துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களை கௌரவிக்கும் மறக்கமுடியாத விழா!

இந்திய சாதனையாளர் விருதுகள் 2025 விழா சென்னை மந்தவெளியில் உள்ள குமாரராஜா முத்தையா ஹாலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சமூகப் பணியாளர்கள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல துறைகளில் சிறந்து விளங்கும் நபர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.

பல துறைகளில் சிறந்து விளங்கிய கலைஞர்கள்,தொழிலதிபர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் பட்டன.
Integrated Law Welfare Foundation India, All India Integrated Law Welfare Human Rights Wings & Mother Maheshwari Educational Charitable Trust இந்த நிகழ்வுகளை ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
திரு .அமல்ராஜ் அவர்கள் ( Tamil Nadu & Puducherry Bar Council Chairman ),திரு.துரைக்கண்ணன்
( Egmore Court Advocates Association President ),திரு.கிருஷ்ணன் அவர்கள்
( Former Judge, High Court & Chairman Film Subsidy Committee ),டாக்டர் M.R.செளந்தரராஜன் (Ideoligst,writer,
IPC Cycling World Champion),திரு.அக்ரி ராஜேந்திரன் அவர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

சிறுவர் சபரிவாசன் வழங்கிய யுனிசைக்கிள் மற்றும் நடனங்கள் மட்டுமல்லாமல் கலைய்நாட்டிய பள்ளி, வைசு ஸ்டுடியோ இணைந்த நடனங்கள்,

மாஸ்டர் சாய் ஸ்ரீனிவாஸ் அவர்களின் இனிய பாடல்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தன.
