இங்க நான் தான் கிங்கு விமர்சனம்


சந்தானத்திற்கு கல்யாண வயது தாண்டியும் சொந்த வீடு இல்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.ஒரு திருமண தகவல் நிறுவனத்தை நடத்தி வரும தன் நண்பன் விவேக் பிரசன்னாவிடம் வேலை பார்த்துக்கோண்டே 25 லட்சத்தை கடன் வாங்கி வீடு வாங்குகிறார்.வீடு வாங்கியும் கடன் இருப்பதால் திருமணம் தள்ளி போகிறது.மேலும் அவர் ஒரு பொருத்தமான துணையை தேடுகிறார், அவரை நேராக அவரது வாழ்க்கையை புரட்டிப்போடும் ஒரு திருமணத் திட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் திருமண தரகர் மனோபாலா.
சந்தானத்தை ஒரு பணக்கார ஜமீன் தம்பி ராமையா மகள் பிரியாலயாவை திருமணம் செய்து வைக்கிறார். ஆனால், திருமணத்துக்குப் பிறகுதான் ஜமீன் குடும்பம் ஏற்கனவே பல கோடி கடனில் இருப்பதும் தெரிய வருகிறது பிரியாலவோடு ஜமீன் தம்பி ராமையா அவரது மகன் சின்ன ஜமீன் பால சரவணன் சந்தானத்தின் வீட்டில் வீட்டோடுமாமனார்,மச்சானாக இருக்க சென்னைக்கு வந்து விடுகிறார்கள்.
இருவரையும் சமாளிக்க வேண்டியிருந்த இந்த நிலையில் சென்னையில் வெடிகுண்டு வைத்து நாசவேலைகளில் ஈடுபட ஒரு தீவிரவாத கும்பல் வர,அந்த கும்பலைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் விவேக் பிரசன்னாவை போலவே இருக்க,அவர் சந்தானத்தின் வீட்டில் எதிர்பாராமல் வந்து மாட்டிக்கொண்டு கரண்ட் ஷாக் அடித்து இறந்து விடுகிறார்.இதனால் அதிர்ச்சியாகும் சந்தானத்தின் குடும்பம் என்ன செய்வதென்று தெரியாமல் முனிஷ்காந்த்திடம் அந்த உடலை ஒப்படைக்கின்றனர்.தன் நண்பன் விவேக் பிரசன்னா தான் இறந்து விட்டதாக சந்தானம் நினைக்க, உயிருடன் இருக்கும் விவேக் பிரசன்னாவை பார்த்தவுடன் உருவ ஒற்றுமை உண்மையை புரிய வருகிறது. பயங்கரவாதியைப் பிடிப்பவருக்கு ரூபாய் 50 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்ற முக்கிய செய்தி வர வெற்றியும் அவரது குடும்பமும் சேர்ந்து முனிஷ்காந்த்தை தொடர்பு கொள்கின்றனர்.ஆனால் அந்த தீவிரவாதி உடல் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியாகும் சந்தானம்,தன் நண்பர் விவேக் பிரசன்னாவை வைத்து அந்த தீவிரவாத கும்பலை பிடித்து தர வழி அமைக்கிறார். அதன் பின் என்ன நடந்தது சந்தானத்திற்கு பணம் கிடைத்ததா கடனை அடைத்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
சந்தானம் தன்னுடன் இணைந்து நடிக்கும் அனைத்து நகைச்சுவை நடிகர்களுக்கு அவர்களின் நகைச்சுவைகளை வழங்குவதற்கு சரிசமமான இடம் கொடுத்து தானும் தனது தனித்திறமையை நிரூபித்துள்ளார்.
ப்ரியாலயா தேன்மொழியாக அழகாகவும் அமைதியாகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
விவேக் பிரசன்னா இரட்டை வேடத்தில் சிறப்பாக செய்துள்ளார்.மேலும் மற்ற கலைஞர்களான முனிஷ்காந்த், சுவாமிநாதன்,மாறன்,மனோபாலா, சேசு ஆகியோர் நேர்த்தியான நடிப்பை தந்துள்ளனர்.
டி.இமானின் இசையில் பாடல்கள், பின்னணி இசை அனைவருக்கும் பிடித்த மாதிரி அமைந்துள்ளது.
ஓம் நாராயண் ஒளிப்பதிவும்,எடிட்டர் எம்.தியாகராஜன் எடிட்டிங்கும் படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
கடன் வாங்கி,அதை அடைக்க முடியாமல் தவிக்கும் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கும் இயக்குனர் ஆனந்த் நாராயண் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
இங்க நான் தான் கிங்கு குடும்பத்துடன் பார்க்க வேண்டிய காமெடி கிஙகு.