இன்றைய பெண்களுக்கான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் வீடியோ பாடலான ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…

*இன்றைய பெண்களுக்கான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் வீடியோ பாடலான ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்காக இணைந்துள்ள யூடியூபர் நக்ஷா சரண் & சாண்டி*

இளம் யூடியூப் பிரபலமும் கல்லூரி மாணவியுமான நக்ஷா சரண், பிரபல நடன இயக்குநர் சாண்டி ‘மாஸ்டர்’ உடன் இணைந்து ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ எனும் இன்றைய தலைமுறைக்கு பொருத்தமான செய்தியுடன் கூடிய இளமை ததும்பும் சுறுசுறுப்பான வீடியோ பாடலை உருவாக்கியுள்ளார்.

பிப்ரவரி 23-ம் தேதி சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் சோனி மியூசிக் மூலம் வெளியிடப்பட்ட ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ மகளிர் சக்தியின் வண்ணமயமான கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில், வாழ்க்கையில் பெரிய உயரங்களை அடைந்த பிறகு வேர்களை மறந்துவிடக்கூடாது, தனிப்பட்ட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கவனித்துக்கொள்வது அவசியம், கல்வி மற்றும் தொழில் போன்றவற்றில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் போன்ற அவசியமான செய்திகளை பெண்களிடையே கொண்டு சேர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நடிகையாக விரைவில் தனது திரைப்படப் பயணத்தை தொடங்கவுள்ள நக்ஷா சரண், சாண்டியின் நடன இயக்கத்தில் உருவாகியுள்ள இப்பாடலுக்காக அவருடன் இணைந்து நடனமாடி இருப்பதோடு, பாடலைப் பாடியும் உள்ளார். ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ வரிகளை எழுதியுள்ள பிரபல கன்னட இசையமைப்பாளர் லியோ இப்பாடலின் மூலம் இசையமைப்பாளராகவும் தமிழில் தடம் பதிக்கிறார்.

பெரிய பட்ஜெட் படங்களைப் போன்று அதிக பொருட்சலவில் இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’-க்கு ஹரிஷ் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் கலை இயக்கத்தையும், ஸ்ரீதேவி ஆடை வடிவமைப்பையும், யாமினி சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையையும் கையாண்டுள்ளனர். மாதவன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். இந்த வீடியோவை முதலியார் பிரதர்ஸ் பிலிம் தயாரித்துள்ளது.

கவர்ந்திருக்கும் மற்றும் கருத்தாழமிக்க வரிகள், உற்சாகமிக்க இசை மற்றும் விறுவிறுப்பான நடன அசைவுகளுடன் கூடிய ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்…’ பாடலின் மூலம் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பிடிப்பதை ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற இசை மேதை ஏ ஆர் ரஹ்மானின் இசைப் பள்ளியின் முன்னாள் மாணவியான நக்ஷா சரண் நோக்கமாகக் கொண்டுள்ளார்.

**Tamil and English Press Release:*