உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.கதையின் நாயகனான ஜவுளி கடை நடத்தும் ரஞ்சித் மனைவி மெகாலி மீனாக்ஷி மற்றும் மகள் மௌனிகா மகன் நீலேஷ் அளவான குடும்பம். ரவிச்சந்திரன் ஜவுளி வியாபாரத்திற்காகவும், மகனின் இருதய ஆபரேஷனுக்காகவும் கந்து வட்டி கும்பல் தலைவன் விட்டல் ராவிடம் கடன் வாங்குகிறார்.வியாபரத்தில் நஷ்டமடைந்து ஒரு கோடிக்கு கடனாளியாகி விட,ஒரு வாரத்தில் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற விட்டல் ராவ் நெருக்கடி கொடுத்து இரண்டு அடியாட்கள் கண்காணிப்பில் வீட்டு காவலில் வைக்கப்படுகிறார் ரஞ்சித்.வீட்டு வாடகை, பள்ளி கட்டணத்துடன் கந்து வட்டிக் கட்டணத்தையும் கட்ட முடியாமல் தவிக்கும் ரஞ்சித் தன் நண்பர்களிடம், தெரிந்தவர்களிடம் கடன் கேட்க அனைவரும் கைவிரித்து விடுகின்றனர். ரவுடி விட்டல் ராவும்,அவரது தம்பி புதுப்பேட்டை சுரேஷ் பணத்தை கட்ட முடியவில்லை என்றால் மனைவியையும், மகளையும் பிணையாக அழைத்துச் சென்று விடுவேன் என்று மிரட்டுகின்றனர். இவர்களின் அராஜகத்தை தட்டி கேட்க முடியாமல் மன உளைச்சலில் தவிக்கிறார் ரஞ்சித்.இதற்கிடையில் சைக்கோ கொலையாளி ஒருவன் காலில் காயத்துடன் ரஞ்சித் வீட்டிற்குள் நுழைந்து மாடியில் இருக்கும் பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் ஒரு அறையில் ஒளிந்து கொள்கிறான்.ரஞ்சித் குடும்பத்திற்கு இந்த சைக்கோ கொலையாளி பதுங்கி இருப்பது தெரியாது. ஏற்கனவே வட்டி பணத்தை கட்ட முடியாமல் தற்கொலைக்கு முயலும் ரஞ்சித்தை சமாதானப்படுத்தி அவரது மனைவி காப்பாற்றுகிறார்.குடும்பத்திற்காக தற்கொலை முயற்சியை தற்காலிகமாக கைவிட்டாலும் பணத்திற்கு என்ன செய்வதேன்று தெரியாது தவிக்கிறார் ரஞ்சித்.நீண்ட யோசனைக்கு பிறகு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கின்றனர் தம்பதியர்.இறுதியில் ரஞ்சித் குடும்பம் தற்கொலை செய்து கொண்டார்களா கத்து வட்டி கும்பலின் பிடியில் மாட்டிக் கொண்டார்களா வீட்டில் பதுங்கி இருக்கும் சைக்கோ கொலையாளியால் இவர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டதா யார் இந்த சைக்கோ கொலையாளி அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நஷ்டப்பட்ட தொழிலதிபராக ரஞ்சித் படம் முழுவதும் சிறப்பாக நடிதுள்ளார்.
ரஞ்சித்தின் மனைவியாக மெகாலி மீனாக்ஷி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்ற கதாபாத்திரங்களான மௌனிகா, நீலேஷ்,விட்டல் ராவ்,புதுப்பேட்டை சுரேஷ், கதிரவன் ஆகியோர் அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்துள்ளனர்.
சுனில் லாசர் அவர்களின் இசையும், ஒளிப்பதிட சூர்யகாந்தி அவர்களின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கந்து வட்டி கும்பலின் அராஜக செயல்களை சுட்டிக் காட்டி அதற்கேற்ப திரைக்கதை அமைத்து சிறந்த படமாக இயக்கியுள்ள அறிமுக இயக்குனர் வெங்கட் ஜனா அவர்களுக்கு பாராட்டுகள்.
இறுதி முயற்சி அனபவமான நல்ல முயற்சி.
