மாண்புமிகு முதல்வர் தளபதி விஜய் சிறை தண்டனை முடிந்து விடுதலையாகும் தருணத்தில் அவருக்கு நெருக்கமான சிறை கண்காணிப்பாளர் கௌதம் வாசுதேவ் மேனன் எதிர்பாராத விதமாக உயிரிழக்க நேரிடுகிறது பயந்த சுபாவமும் சிறுவயது மன அதிர்ச்சியும் கொண்ட அவருடைய மகள் மமிதா பைஜூவை பாதுகாத்து ஒரு தைரியமிக்க பெண்ணாக மாற்றி இந்திய ராணுவத்தில் சேர்க்கும் பெரும் பொறுப்பு விஜயின் தோள்களில் வந்து விழுகிறது. ஒருபுறம் பயந்து நடுங்கும் மமிதாபைஜூவை தனது அரவணைப்பாலும் கடுமையான பயிற்சிகளாலும் சிங்கப்பெண்ணாக உருவெடுக்க வைக்கும் உணர்ச்சிபூர்வமான தந்தை,மகள் போன்ற பாசப் போராட்டம், மறுபுறம் சர்வதேச அளவில் அதிநவீன ரோபோடிக் போர் தொழில்நுட்பங்கள், ஆயுதக் கடத்தல் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் மூலம் இந்திய நாட்டின் ஜனநாயகத்தையும் அமைதியையும் ஒட்டுமொத்தமாகச் சீர்குலைக்க துடிக்கும் பாபி தியோலின் மிரட்டலான சதித்திட்டம் அம்பலமாகிறது.இதன் பின்னணியில் தான் சிறை சென்றதற்கு உண்மையான காரணத்தையும் சர்வதேச எதிரியான பாபிதியோலின் நாசவேலைகளையும் ஒன்றுசேர்த்து முறியடிக்க விஜய் எவ்வாறு களமிறங்குகிறார் என்பதும் புலனாய்வு பத்திரிகையாளரான பூஜா ஹெக்டே உதவியோடு நாட்டின் அனைத்து அமைப்புகளையும் ஆட்டிப்படைக்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடி இறுதியில் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கை மிக்க ‘ஜனநாயகன்’ஆக அவர் எவ்வாறு உருவெடுக்கிறார் என்பதே மீதிக்கதை.
விஜய் தனது இயல்பான நடிப்பு மற்றும் உணர்வுபூர்வமான வெளிப்பாடுடன் ஆக்ஷன், குடும்பம்,காதல்,உணர்ச்சி,சமூகப் பொறுப்பு என அனைத்து பரிமாணங்களையும் கையாண்டு தனது அனுபவத்தை நிரூபித்துள்ளார்.உணர்ச்சிப்பூர்வமான தந்தை,மகள் பாசப்பிணைப்பு மற்றும் கம்பீரமான ஆக்க்ஷன் என இரண்டையும் சமநிலைப்படுத்தி,குறிப்பாக அதிரடி சண்டைக் காட்சிகளிலும் குடும்பக் காட்சிகளில் பாசமிக்க மனிதராகவும் ரசிகர்களின் மனதை தொடும் வகையில் சிறப்பாக நடித்துள்ளார்.
பத்திரிகையாளராக வரும் பூஜா ஹெக்டே இளமை ததும்பும் தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாகக் கையாண்டு சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் பாபி தியோல்,மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன்,பிரகாஷ் ராஜ், பிரியாமணி,நரேன்,சுனில்,ரேவதி,ஜி.எம். சுந்தர்,ஷரத் ரவி,அர்ஷத் ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத்தின் இசை பிண்ணனி இசை,ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு கதைக்கு இரட்டிப்பு பலம்.
சமூகப் பொறுப்புள்ள அழுத்தமான கருத்துகளையும் சரியான விகிதத்தில் கையில் எடுத்து பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் சிறந்த திரைக்கதை அமைத்து மிக பிரமாண்டமான முறையில் இயக்கி இருக்கும் இயக்குநர் எச். வினோத் அவர்களுக்கு பாராட்டுகள்.
‘ஜனநாயகன்’ஜனங்களின் மாஸ் நாயகன்
