கல்லூரியில் படித்துக்கொன்டிருக்கும் ரியோ ராஜ் தன்னுடன் படிக்கும் மாணவியான மலையாள பெண்ணான மாளவிகா மனோஜை காதலிக்கிறார்.
இந்த நேரத்தில் இவர்களின் காதலுக்கு மாளவிகா மனோஜின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
மாளவிகா மனோஜ் ரியோ ராஜை தன் பெற்றோரிடம் பேச அழைக்கிறார் .
மாளவிகா மனோஜின் குடும்பத்தாருக்கும் ரியோ ராஜிக்கும் ஏற்படும் பிரச்சனையால் காதலர்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இக்கட்டான இந்நேரத்தில் மாளவிகா மனோஜிக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு திருமண ஏற்பாட்டினை செய்கின்றனர்.
இதை விரும்பாத மாளவிகா மனோஜ் காதல் தோல்வியால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இதனால் பாதிப்படைந்த ரியோ ராஜ் தன்னை தானே அழித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயற்சி செய்கிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பிழைத்து கொள்ளும் ரியோ ராஜ் தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் ஆலோசனைப்படி மற்றொரு நாயகியான பவ்யா ட்ரிகாவை திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணம் செய்ய விருப்பம் இல்லாத பவ்யா ட்ரிகாவுக்கு ரியோ ராஜை கணவராக ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவரை பார்த்தாலே கோபமடைந்து எரிச்சலடைகிறார்.
பவ்யா ட்ரிகா திருமணத்தை ஏன் வெறுக்கிறார்

பவ்யா ட்ரிகாவின் பிரட்சனையை என்ன என்பதை தெரிந்து கொண்ட ரியோ ராஜ் சாமர்த்தியமாக அதனை தீர்த்து வைக்க முயற்சித்தாரா
மாளவிகா மனோஜின் காதலை போல பவ்யா ட்ரிகாவுடன் நடந்த திருமணமும் ரியோ ராஜிக்கு தோல்வியில் முடிந்ததா என்பதுதான் மீதிக்கதை.
நாயகனாக நடிக்கும் ரியோ இருவேறு கதாபாத்திரங்களை தனது உணர்வுபூர்வமான நடிப்பில் மிகவும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.
நாயகியாக நடிக்கும் நடிகை மாளவிகா மனோஜ் அமைதியான அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றொரு நாயகி பவ்யா ட்ரிகா கதைக்கேற்றபடி இயல்பாக நடித்துள்ளார்.
சார்லி,அன்புதாசன்,ஏகன்,விஜே ராகேஷ், ஜெயகுமார்,இளங்கோவன்குமணன்,ஸ்ரீராம் என மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
இசையமைப்பாளர் சித்து குமாரின் இசையில் பாடல்களும்,பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர் ராகுல் கே.ஜி.விக்னேஷின் ஒளிப்பதிவு

படத்திற்கு மற்றொரு பலம்.
இரண்டு விதமான காதல் கதைகளையும் அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய வகையில் உணர்ச்சிமயமான காதல் படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரிஹரன் ராம்.எஸ் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
மொத்தத்தில் ஜோவுக்கு ஒரு ஜே
