காந்தாரா அத்தியாயம் 1 ​விமர்சனம்

பாங்கரா அரச குடும்பத்திற்கும் – ஈஸ்வர பூந்தோட்டம் என்று அழைக்கப்படும் காந்தாரா மக்களுக்கும் இடையிலான போரின் கதை. பாங்கராவின் மன்னர் ராஜசேகரா ஜெயராம் தன் மகன் குல்ஷன் தேவையாவை புதிய மன்னராக அறிவித்து மகுடம் சூட்டுகிறார்.பதவியேற்கும் மன்னர் குல்ஷன்,நண்பர்களுடன் சேர்ந்து மது குடிப்பது,மதிக்காத தன்மையுடன் தீய எண்ணங்கள் நிறைந்தவராக கொடுங்கோலனாக ஆட்சி செய்கிறார். இதற்குநேர்மாறாக,அவரது சகோதரி ருக்மிணி வசந்த் அழகும்,புத்திசாலித்தனம், சாதுர்யம் நிறைந்து,கடினமான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்படுவதில் வல்லவராக,வர்த்தகம் மற்றும் துறைமுக பொறுப்புக்களை ஏற்று செவ்வென செய்து வருகிறார். இந்நிலையில் ரிஷாப் ஷெட்டி ஈஸ்வர பூந்தோட்டத்தின் இளம் தலைவராக காந்தாரா மக்களால் கொண்டாடப்படுகிறார். காந்தாரா இயற்கை வளங்கள் மூலிகை பொருட்கள் நிறைந்த வனப்பகுதிக்குள் நுழைந்து வேட்டையாட வரும் பாங்கரா மன்னர் குல்ஷன் தேவையாவை அடித்து அனுப்பி விடுகிறார். இதனிடையே காந்தாரா மக்களின் மூதாதையர்கள் இப்பகுதியில் ஒரு பிரம்ம ராட்சசன் இருப்பதாகவும் விளையும் பொருட்களின் ஒரு பகுதியை படைத்து விட்டு செல்வதை வழக்கமாக நம்பிக்கையுடன் கடைப்பிடிக்கின்றனர்.அதன் பின் பிரம்மராட்சசன் எடுக்கவில்லை இந்த பொருட்களை எடுத்துச் செல்வது பாங்கரா ஆட்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ரிஷாப் ஷெட்டி, தானே வணிகம் செய்ய முடிவு செய்து பாங்கரா செல்ல நினைக்கிறார். அதற்காக தனது தாயாரிடம் வணிகத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி கூறி தன் இன மக்களின் உற்பத்தி பொருட்களை எடுத்துச் சென்று வணிகம் செய்து வேண்டிய பொருட்களை பண்ட மாற்றம் செய்து முன்னேற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.பாங்கரா பகுதிக்கு செல்லும் ரிஷாப் ஷெட்டி அங்கு நடக்கும் வணிக பரிமாற்றங்கள்,பண்ட மாற்ற முறைகளை பார்த்து தெரிந்து கொண்டு தங்கள் விலை பொருட்களை வணிகம் செய்ய முற்படுகின்றனர். இதனால் பாங்கரா படைவீரர்களுக்கும்,ரிஷாப் ஷெட்டி மக்களுக்கும் இடையே சண்டை நடந்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். அங்கிருந்து சாமர்த்தியமாக தப்பிக்கும் ரிஷாப் ஷெட்டி மற்றும் கூட்டாளிகள் காந்தாரவிற்கு சென்று மீண்டும் பொருட்களை எடுத்து வந்து பாங்கராவில் வணிகம் செய்ய வருகின்றனர்.இவர்களின் தைரியம்,வணிகம் செய்யும் திறனை பார்த்து வியந்த இளவரசி காந்தாரவின் விளைபொருட்களை வர்த்தகம் செய்யும் திட்டங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறார். இது பாங்க்ரா ஆட்சியாளர்களுக்கு மேலும் மோதலைத் தூண்டுகிறது. தனது சகோதரி இளவரசி ருக்மிணியை எச்சரிக்கும் குல்ஷன்,ரிஷாப் ஷெட்டியை பழி வாங்க காந்தாரா பகுதியை வசப்படுத்த அங்கே படையுடன் செல்கிறார். காந்தாராவில் ரிஷாப் ஷெட்டியின் தாய் உட்பட பல கிராம மக்களை கொல்லும் போது ஆவேசமடையும் ரிஷாப் ஷெட்டி குல்ஷனையும் அவர்களது படையையும் துவம்சம் செய்து கொன்று விடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும் ஜெயராம் மற்றும் இளவரசி ருக்மிணி வசந்த் என்ன செய்தனர் ரிஷாப் ஷெட்டி இவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கினாரா அவர்களுக்கு இடையிலான போரில் தெய்வீகத்தின் பங்குஎன்ன இயக்குனர் ரிஷாப் ஷெட்டி, தெய்வம் மற்றும் ஈஸ்வர தோட்டத்தில் நடக்கும் சம்பவங்களின் பின்னணி என்ன என்பதே காந்தாரா அத்தியாயம் 1ன் மீதிக்கதை.
காந்தாராவின் தலைவன் பெர்மேவாக ரிஷப் ஷெட்டி தத்ரூபமான ஆக்ரோஷமான நடிப்பால் மிரட்டியுள்ளார்.
இளவரசி கனகவல்லியாக ருக்மிணி சிறப்பாக செய்துள்ளார்.
மற்றும் ஜெயராம்,குல்ஷன் தேவய்யா,பிரகாஷ் டம்மினாடு,ராகேஷ் பூஜரி மற்றும் நவீன் பாடில் ஆகியோர் அவரவர் பாத்திரங்களை சிறந்த முறையில் ஏற்று நடித்துள்ளனர்.
அஜனீஷ் லோக்நாத் அவர்களின் இசையும்,அரவிந்த் எஸ்.காஷ்யப் அவர்களின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலத்துடன் விறுவிறுப்பையும் தந்துள்ளது.
புராணத்தின் எதிரொலியாக பல திருப்பங்கள் நிறைந்த திரைக்கதையாக படைத்துள்ள இயக்குனர் ரிஷப் ஷெட்டி அவர்களை வெகுவாக பாராட்டலாம்.
காந்தாரா அத்தியாயம் 1 பிரமாண்ட மிரட்டல்.