கபில் ரிட்டன்ஸ் விமர்சனம்

மகன் இன்ஜினியராக வேண்டும் என்று நினைக்கும் தந்தை டாக்டராக வேண்டும் என்று நினைக்கும் தாய் கலெக்டராக வேண்டும் என்று நினைக்கும் தாத்தா இந்த மூவரின் கனவுகளையும் பூர்த்தி செய்யாத மகன் மகன் வேறு விதமாக மொபைல் போன், வீடியோ கேம் போன்ற இதர விளையாட்டுக்களில் மூழ்கி விடுகிறான். திடீரென கிரிக்கெட்
விளையாடும் வாய்ப்பு மகனுக்கு வருகிறது. இதை தந்தை வேண்டாம் என்று மறுக்கிறார்.இதனால் மகன் என்னவானான் தந்தை ஏன் தன்னை ஒரு கொலை குற்றவாளி என அடிக்கடி நினைத்து மனம் புழுங்கி மன உலச்சலுக்கு ஆளாகிறார். இதை அறியும் மனைவி ஏன் எதற்காக என்று ஆராய்வது இறுதியில் என்ன நடந்தது எனபதுதான் தான் கதை.மனைவி ஆராய்வதில் தான் பல திருப்பங்கள் நடக்கின்றது.
கதையின் நாயகனாக டாக்டர். ஸ்ரீனி சௌந்தரராஜன்அசோக் என்கிற கதா பாத்திரத்தில் மிக அழகாக நடித்தது மட்டும் இன்றி கதை திரைக்கதை வசனம் இயக்கம் இவைகள் அனைத்தையும் அவரே மேற்கொண்டுள்ளார் இதற்காக இவரை பாராட்டியே ஆகவேண்டும்.
கதையின் நாயகியாக நிமிஷா மீரா என்ற கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
மற்ற கதாபாத்திரங்களான பருத்திவீரன் சரவணன், ரியாஸ்கான் ,வையாபுரி , மாஸ்டர் பரத்,மாஸ்டர் ஜான் ,சத்தியமூர்த்தி, சார்லஸ் ஆண்டனி, ரேஷ்மி அவரவர்கள் பங்கினை சரியாக செய்துள்ளனர்.
ஷியாம் ராஜின் ஒளிப்பதிவு
ஆர்.எஸ்.பிரதாப் ராஜ் அவர்களின் இசை படத்திற்கு பக்க பலம். வில்சியின் எடிட்டிங்,
சங்கர் நடனம் நன்றாக அமைந்துள்ளது.
குன்றத்தூர் பாபுவின் சண்டை காட்சிகள் சிறப்பு. கபில் ரிட்டன்ஸ் பாசமான படைப்பு.