கேரளா எல்லையில் உள்ள ஆனைக்கொல்லி என்ற மலைக் கிராமத்தில் யானை கூட்டங்களால் அப்பாவி மக்கள் அடித்துக் கொலைசெய்யப்படுகிறார்கள்.இதனையடுத்து யானைகளை கொன்று தந்தங்களை கடத்தும் சுனிலிடம் ஊர் மக்கள் உதவி கேட்கிறார்கள்.காட்டு யானைகளை கொன்று தந்தம் எடுத்து கடத்தும் சுனில் அந்த மக்களை அடிமைப்படுத்துவதோடு பெண் களையும் சிறுமிகளையும் தூக்கிச் சென்று கற்பழித்து சீரழிகிறான்.இதே சமயம் சுனில் இடத்தை பிடிக்க நினைக்கும் கபீர் துகான் சிங்,சுனில் கடத்தும் தந்தங்களை காவல்துறை உயர் அதிகாரி உதவியுடன் கைப்பற்றுகிறார்.இந்நிலையில் பறிக்கப்பட்ட தந்தங்களை மீட்பதற்காக நாயகன் ஆண்டனி வர்கீஸை சுனில் களத்தில் இறக்குகிறார். காவல்துறை உயர் அதிகாரியை ஏமாற்றி இழந்த தந்தத்தை மீட்டெடுப்பதோடு சுனில் மனதில் ஆண்டனி வர்கீஸ் தனி இடம் பிடிக்கிறார்.இதற்கிடையே பழங்குடி சிறுமிக்கு விபத்து ஏற்பட அவரை காப்பாற்ற பல லட்சம் தேவைப்படுகிறது.ஆண்டனி வர்கீஸ் சுனிலிடம் பணம் கேட்க அதை கொடுக்க மறுக்கிறார் சுனில்.இதையடுத்து பணத்திற்காக காட்டு யானை ஒன்றை கொன்று அதன் தந்தத்தை விற்பதற்காக ஸ்ரீலங்காவிற்கு கொண்டு செல்கிறார்.
இதனால் கோபமடையும் சுனில் ஆண்டனியை கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார்.இறுதியில் ஆண்டனி வர்கீஸ் யானை தந்தத்தை விற்பனை செய்தாரா இல்லையா சிறுமி உயிரை காப்பாற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸ் அமைதியான முகத்தோடு அதிரடி சண்டைக்காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
நாயகனை காப்பாற்றும் முக்கிய வேடத்தில் துஷாரா விஜயன் அதிரடி காட்டி நடித்திருக்கிறார்.
மற்றும் பார்த் திவாரி,ஜெகதீஷ்,சித்திக், ஹனன் ஷா,ஹிப்ஸ்டெர் எனஅனைவரும் சிறப்பாக நடித்தூ இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ரவி பசுரூர் இசையும்,ரெனாடைவ் ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
யானை தந்தம் கடத்தலை மைய கருவாக எடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து ஒரு அதிரடி திரைப்படத்தை தந்துள்ள இயக்குநர் பால் ஜார்ஜ் அவர்களுக்கு பாராட்டுகள்.
’காட்டாளன்’அதிரடி ஆக்க்ஷன்.
