கொலைச் சேவல் விமர்சனம்

கலையரசனும்,தீபா பாலுவும் அதிக கட்டுப்பாடு நிறைந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.இருவரும் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்.தீபாபாலு தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.​தங்கள் குடும்ப வழக்கப்படி, கர்ப்பமாக இருக்கும் பெண் தனது ஒன்பதாவது மாதத்தில் ஊர் எல்லையைத் தாண்டி உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது ஐதீகம். இதற்காகத் தனது குடும்பத்தினருடன் அந்த மலை கோவிலுக்கு பயணப்படுகிறார்கள்.கலையரசன் குடும்பத்தினர் முன்னே செல்ல,கவலையரசனும் தீபாபாலுவும் பைக்கில் பின்னால் வருகிறார்கள். கோவிலுக்குள் காலடி எடுத்து வைக்கும் போதே,தீபாவிற்கு ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது என்ற உள்ளுணர்வு பயத்தை ஏற்படுத்துகிறது. கலையரசன் அவளுக்கு தைரியம் கூறி அழைத்துச் செல்கிறான். சேவல் பலியிடு மற்றும் சடங்குகள் முடிந்து அனைவரும் திரும்பும் வேளையில், அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கொடூரமான தாக்குதல் அரங்கேறுகிறது. 200 ஆண்டு கால பாரம்பரியம் என்ற பெயரில் அந்தப் பகுதியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் இருண்ட ரகசியங்கள், சாதி வெறியின் கோர முகம் வெளிச்சத்திற்கு வருகின்றன. அந்தப் பயங்கரமான சூழலில் இருந்து கலையரசனும் கர்ப்பிணியான தீபாபாலுவும் தப்பினார்களா அல்லது அங்கு பலியிடப்பட்ட சேவலை போல் இவர்களும் பலியானார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
கலையரசன் ஒரு பொறுப்பான கணவனாக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
யூடியூப் புகழ் தீபாபாலு அழுத்தமான நடிப்பை தந்துள்ளார்.
மற்றும் பாலசரவணன்,கஜராஜ்,ஆதவ் சந்திரா,விஜய் சத்யா,அகரன் வெங்கட், விஜயலட்சுமி,ஜெயலட்சுமி,ராஜாமணி, தனலட்சுமி,மஞ்சுளா,கயல்,மணிமேகலை அனைவரும் சிறந்த முறையில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர் சாந்தனின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
சமூகத்தில் சாதி வெறி பிடித்தவர்களின் கொடூரமான பக்கத்தை மறைக்காமல்,வலியுடனும் வேதனையுடனும் கூடிய திரைக்கதை அமைத்து சிறந்த முறையில் இயக்கிய இயக்குனர் வி.ஆர்.துதிவாணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
கொலைச்சேவல் சாதிவெறியின் கடுமையான கொடுமையான தாக்கம்.