குமார சம்பவம் விமர்சனம்

கதையின் நாயகன் குமரன் தியாகராஜன் ஜமீன் வீட்டு பிள்ளையாக இருந்தாலும் சினிமாவில் இயக்குனராகி ஜெயிக்க வேண்டும் என்பது குமரன் தியாகராஜன் எண்ணம். அதற்காக பல்வேறு இடங்களில் முயற்சி செய்கிறார். இந்நிலையில் குமரனது வீட்டில் குடியிருந்த சமூக சேவகர் குமரவேல் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.இந்த விவகாரம் குமரன் வாழ்க்கையை புரட்டிபோடுகிறது.குமரவேலை கொன்றது யார் என்று போலீஸ் விசாரிக்கிறது.இந்த விசாரணையில் குமரன் உள்ளிட்ட பல நபர்கள் விசாரணைக்கு உள்ளாகிறார்கள்.குமரவேலை கொன்றது யார் என்று கண்டுபிடிக்க குமரனே தனிப்பட்ட முறையில் துப்பறியும் வேலையில் ஈடுபடுகிறார்.தாத்தா ஜி.எம். குமார்,மாமா வினோத் முன்னா,ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கர் மற்றும் குமரனின் நண்பர் பாலா சரவணன்,ஒரு திரைப்பட தயாரிப்பாளர் லிவிங்ஸ்டன்,டாக்டராக விரும்பும் சகோதரி,ஆர்வமுள்ள நடிகராக விரும்பும் வினோத் சாகர் மற்றும் பல கதாபாத்திரங்கள் இணையும் போது குமரவேலை கொன்றது யார் என்ற மர்மத்தை போலீஸ் விசாரணையின் வழியாக விறுவிறுப்பாகவும், நகைச்சுவையுடனும் சொல்லப்படுவதே படத்தின் மீதிக்கதை கதை.குமரன் தங்கராஜ் தனது முதல் படத்திலேயே நகைச்சுவை மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார்.மற்ற கதாபாத்திரங்களான ஜி.எம். குமார், குமாரவேல்,வினோத் சாகர்,பாலசரவணன், வினோத் முன்னா சிவா அரவிந்த்,பாயல் ராதாகிருஷ்ணன், லிவ்விங்ஸ்டன்,கௌதம் சுந்தரராஜன், வினோத் முன்னா,சிவா அரவிந்த், அர்ஜெய்,விஜய் ஜாஸ்பர்,சரவணன், கே.கோபால்,டெலிபோன் ராஜ்,சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ்,கவிதா,ஷ்ரவன் ராமகிருஷ்ணன்,யஷ்வன் ரமேஷ் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்து நடித்துள்ளனர்.அச்சு ராஜாமணியின் இசையும் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். ஒரு சிம்பிளான மர்ம கதையை நகைச்சுவையுடன் கலகலப்பாகவும் இயக்கியுள்ள இயக்குனர் பாலாஜி வேணுகோபால் அவர்களுக்கு பாராட்டுகள்.
குமார சம்பவம் படம் பார்பவர்களுக்கு தரமான சம்பவம்.