கதையின் நாயகன் மதி குடிகாரத் தாய் சூசன்,ஒழுக்கற்ற மாற்றான் தந்தையுடனும் வளருகிறார்.இதனால் தாயின் முழுமையான அன்பு கிடைக்காமல்,பள்ளியில் சக மாணவர்களின் நட்பு கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகிறார்.இதனால் மனநிம்மதி இல்லாமல் தனிமையில் சோகத்தில் தவிக்கும் மதியை அவருடைய பள்ளி ஆசிரியர் அவனிடம் அன்பு செலுத்தி அவனுக்கு ஆதரவாக இருந்து நீ இயற்கையை நேசி,மரங்களை நேசி, ஆர்ப்பரித்து செல்லும் அருவியை நேசி, விலங்குகளை நேசி என்று அவனுக்கு ஊக்கம் அளிக்கிறார்.இயற்கையை நேசிக்க தொடங்கும் மதி,ஒரு நாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் வழி தவறி பள்ளத்தில் உள்ள சேற்றில் சிக்கிக்கொண்ட குட்டி யானையை போராடி மீட்கிறான். நன்றியுடன் யானை மதியை சுற்றி வருகிறது.பாசத்திற்காக ஏங்கும் மதி அந்த யானைக்கு நிலா என்று பெயர் வைத்து சகோதரன் போலவே பாவித்து அன்பு காட்டி வனப் பகுதியின் ஓரிடத்தில் வைத்து வளர்த்து வருகிறான். நிலாவுக்கும், மதிக்கும் இடையே இனம் புரியாத பாசம், ஆழமான நட்பு மதியின் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு நாள் இந்த விஷயம் மதியின் பெற்றோருக்கு தெரிய வருகிறது. மதியை நிலாவுடன் பழக அனுமதித்து அவனிடம் பாசத்துடன் இருப்பது போல் நடிக்கிறார்கள். காரணம், நிலா முழுமையாக வளர்ந்தவுடன் வேட்டை காரர்களுக்கு பெரிய தொகைக்கு விற்று விட அவர்கள் திட்டம் போடுகிறார்கள். ஒரு நாள் நிலா திடீரென யானை காணாமல் போகிறது.மதி அதிர்ச்சி அடைந்து நிலை குலைந்து போகிறான். நிலாவை பல இடங்களில் தேடி அலைகிறான். இதற்கிடையே அவனது பள்ளி ஆசிரியர் அறிவுறுத்தலின் படி கல்லூரி படிப்புக்காக வெளியூர் செல்லும் மதி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சொந்த ஊர் திரும்பும் போது மாயமான தன் நிலாவை பற்றி ஒரு தகவல் கிடைக்கிறது. நிலாவை தேடிச் செல்லும் போது யானைகளை விரட்டும் கும்கி யானையாக இருப்பதை பார்க்கிறான்.மதி நிலாவை மீட்டு அழைத்து முயற்சி செய்யும் போது, ஒரு பிரபல அரசியல்வாதி தனது பதவியை காப்பாற்றிக்கொள்ள நிலாவை கடவுளுக்கு உயிர் பலி தர ஏற்பாடு செய்கிறார். அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
பூமி எனும் கதாபாத்திரத்தில் தனது உணர்வுபூர்வமான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார் அறிமுக நாயகன் மதி.
கதாநாயகி ஷிரிதா ராவ்,மதியின் நண்பனாக ஆண்ட்ரூஸ்,அர்ஜுன் தாஸ்,ஆகாஷ்,ஹரிஷ் பெராடி,சூசன் அனைவரும் தங்கள் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னாவின் இசை,ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
இயக்குனர் பிரபுசாலமனின் கும்கி முதல் பாகத்துக்கும் கும்கி 2 -க்கும் துளியும் சம்மதமில்லாமல் கதையை கொண்டு சென்றிருக்கிறார்.
கும்கி 2 அனைவரும் பார்க்கலாம்.
