
படத்தின் நாயகன் மணிகண்டன் ஐடி கம்பெனியில் பணி புரியும் நாயகி ஸ்ரீ கௌரி பிரியா இருவரும் மனதார காதலித்து வருகின்றனர்.
இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கிறது.டிசைனராக வேலை செய்யும் மணிகண்டன் ஒரு கட்டத்தில் ஓட்டல் வைக்கும் முயற்சியில் இறங்க இருக்கும் போது அவர் செய்து வந்த வேலையும் பறி போகிறது.
இதற்கிடையில் விரக்தியான வாழ்க்கையின் வலியை தன் காதலி மீது காண்பித்தும் அடிக்கடி போதையில் கோபமடையும் மணிகண்டன் பிரச்சனை முடிந்ததும் மன்னிப்பு கேட்டு மீண்டும் சமாதானமடைகிறார்.
இந்நிலையில் ஸ்ரீகௌரி பிரியா மணிகண்டனிடம் சொல்லாமல்
நண்பர்களுடன் வெளியூர் பயணம் ஜாலியாக செல்ல அது மணிகண்டனுக்கு தெரிந்துவிடுகிறது.
மீண்டும் தொடர்ந்து போதையில் கோபமடைவதும் பின்பு மன்னிப்பு கேட்பதுமாக மனரீதியாக பிரச்சனை தொடர்வதால் காதலை வெறுத்து மணிகண்டனை பிரிந்தே ஆக வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் ஸ்ரீ கௌரி பிரியா.
மணிகண்டனால் காதல் முறிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் மீண்டும் காதலியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார் மணிகண்டன்.
மணிகண்டனை மன்னித்து மீண்டும் காதல் வாழ்க்கையில் ஸ்ரீ கௌரி பிரியா இணைந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் மணிகண்டன் தனது வித்தியாசமான நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
நாயகி ஸ்ரீ கௌரி பிரியா படம் முழுவதும் தனது இயல்பான நடிப்பில் தடம் பதிக்கிறார்.
படத்தின் ஏனைய கதா பாத்திரங்களான பருத்திவீரன் சரவணன்,கீதா கைலாசம்,கண்ணாரவி, ஹரிஷ் குமார் என நடித்தவர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை தந்துள்ளனர்.
ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு பெரிய பக்க பலமாக அமைந்து உள்ளது .
அனைவரும் ரசிக்கும் வகையில் படத்தை இயக்கியுள்ள இயக்குனர் பிரபுராம் வியாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.
லவ்வர் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் அழகான எதார்த்தமான படைப்பு.
