மாயபிம்பம் விமர்சனம்

கதையின் நாயகனான ஆகாஷ் பிரபு மருத்துவக் கல்லூரி மாணவன் மற்றும் ஹரிருத்ரன், ராஜேஷ்,அருண்குமார் ஆகியோர் பள்ளிப் பருவத்திலிருந்து நெருங்கிய நண்பர்கள். இதில் ஒரு நண்பன் ஒரு பெண்ணை பார்த்ததும் அவள் எப்படிப்பட்டவள் என்பதை துல்லியமாக கூறி,அவளை எளிதில் வீழ்த்த முடியுமா முடியாதா என்பதை கணித்து கூறும் அவனது ஆற்றல் மற்ற நண்பர்கள் சபலத்தில் சிக்கும் வகையில் இருக்குகிறது. அவனது அந்த செயலை எதிர்த்து அது தவறு என்று கூறும் மற்றொரு நண்பன் பேச்சு எடுபடுவதில்லை.மற்றொரு நண்பன் வியப்பு,பிரமிப்பு ஏற்பட்டு அதற்காக ஏங்கும் சுபாவம் கொண்டவன்.நான்காவது நண்பன் ஆகாஷ் பிரபு இவர்களுக்கு மத்தியில் புன்னகையுடன் தன்னுள் உள்ள அந்த உணர்ச்சிகளை வெளிப்படையாக வெளிப்படுத்த தயக்கத்துடன் இருக்கிறான். இந்நிலையில் ஆகாஷ் பிரபு பேருந்து பயணத்தின் போது தற்செயலாக அருகில் நின்று கொண்டிருந்த பேருந்தில் நாயகி ஜானகியை காண்கிறான். அவளை கண்டதும் அவளது அழகில் ஈர்க்கப்படுகிறான். இந்த விஷயத்தை தனது நண்பர்களிடம் கூறுகிறான். மறுநாள், எதிர்பாராத விதமாக ஜானகியை மீண்டும் பார்க்கும்போது ஆகாஷ் பிரபு விபத்தில் சிக்குகிறான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் ஜானகி அவனை நன்கு கவனித்துக் கொள்கிறார். ஒரு பெண்ணை பார்த்ததும் அவள் எப்படிப்பட்டவள் என்பதை கூறும் அந்த நண்பன் ஜானகியை பார்த்ததும் அவளை பற்றி தவறாக புரிந்து கொண்டு அவளை எளிதில் வீழ்த்தி விடலாம் என்றும் அவளது ஈர்ப்பு ஆகாஷ் பிரபு மீது இருக்கிறது என்று கூறுகிறான். முதலில் மறுக்கும் ஆகாஷ், பின் தான் முதலில் பார்த்தது அந்த பெண் இவள்தான் என்று தன் நண்பர்களிடம் கூறுகிறான். நண்பன் ஜானகியை பற்றி தவறாக புரிந்து கொண்டு ஆகாஷை தூண்டி விடுகிறான். ஆகாஷ் ஜானகி இருவரும் நெருக்கமாக பழகும் சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், அந்த நண்பன் ஆகாஷிடம் ஜானகியை தன்னுடன் வெளியே அழைத்து செல்வது போல் அழைத்து சென்று அவளை தனி அறைக்கு அழைத்துப் போகச் சொல்கிறான். இது காதலா அல்லது காமமா என்கிற குழப்பத்தில் இருக்கும் ஆகாஷ், ஜானகியை வெளியே அழைத்து செல்கிறான். ஆகாஷ், எண்ணப்படி ஜானகியை தனி அறைக்கு அழைத்து செல்கிறான். இந்த சூழ்நிலையில் ஆகாஷின் தவறான அந்த செயல், அவரது வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது மாய பிம்பத்தின் மீதிக்கதை.
ஆகாஷ் தனது நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கதாநாயகி ஜானகி தனது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றும் ஹரிருத்ரன்,ராஜேஷ்,அருண்குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
இசையமைப்பாளர் நந்தாவின் இசையும்,எட்வின் சகாயின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
2005-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட காதல் கதையில் காதல், நட்பு, குடும்ப உணர்வுகளை அழகாக பின்னி அமைத்த திரைக்கதையை உணர்ச்சிகரமான காட்சிகளுடன் எதார்த்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர் கே.ஜே.சுரேந்தர் அவர்களுக்கு பாராட்டுகள்.
மாயபிம்பம் உண்மையான உணர்வுகள்.