பிரியங்கா மோகன் தனது பள்ளிப் பருவத்தில் பள்ளியின் ஆண்டு விழாவில் கொரியா நாட்டு ராணியாக நடித்து பரிசு பெறுகிறார்.அந்த நிகழ்வின் ஆசையோடு வளர்ந்து பருவ வயதை அடைந்த பிரியங்கா கொரியா நாட்டு மக்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்கிறார்.தனது கனவு வாழ்க்கை நினைவாகும் வகையில் அவர் கொரியா நாட்டுக்கு செல்கிறாள்.தன்னை உணர்ந்து கொள்ள தனிமை பயணம் மேற்கொள்ளும் பிரியங்கா
கொரியாவில் கிடைக்கப்பெற்ற தாய் கிழவி பார்க் ஹைஜின் உடனான அவருடைய நேசம் தன்னைப் பற்றி பிரியங்கா கண்டு முழுவதும் தெரிந்து கொள்வது,பார்க் ஹைஜினும் தன்னை கண்டு முழுவதுமாக தெரிந்து கொள்வது இரு தலைமுறை பெண்களும் தங்களுக்குள் இருக்கும் வசந்தத்தை கண்டு கொள்கிறார்கள்.இதற்கு பின் என்ன நடக்கிறது அவர் என்னென்ன அனுபவங்களை பெறுகிறார் என்பதே மீதிக்கதை.
செண்பாவின் பாத்திரத்தை அப்படியே உள்வாங்கி பிரியங்கா மோகன் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மற்றும் ரிஷிகாந்த்,திருநாவுக்கரசு,சென்சன் திவாஹர்,ஜெயா,ரியா,சபரிஷ் ராமச்சந்திரன்,ஜெபாஸ்டின் ஆகியோர் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹேஷாம் அப்துல் வஹாப் இசையும்,பிரசன்ன குமார் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
இப்படி ஒரு அரிய கதையை கையில் எடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் கார்த்திக்கின் கனவா இல்லை செண்பாவின் கனவா என்பது தெரியவில்லை இயக்குனருக்கு பாராட்டுகள்.
மேட் இன் கொரியா கனவு மெய்ப்படல்.
