எதாவது தொழில் செய்து சம்பாதிப்பதற்காக சென்னைக்கு வந்த ஷேன் நிகம் அது நிறைவேறியவுடன் தனது சொந்தஊரான புதுக்கோட்டைக்குத் திரும்பிய அவர்,தான் பெற்ற வெற்றியை கொண்டாட தனது காதலிநிஹாரிகா கொனிடேலாவுடன் பிரமாண்டமான திருமணத்தை ஏற்பாடு செய்கிறார். திருமணத்தில் அவ்வளவு ஆர்வம் இல்லாத அவரது வருங்கால மாமனார் அறைமனதுடன் ஒப்புக்கொண்டு வருகிறார். திருமண ஏற்பாடுகள் எல்லாம் நன்றாகவும் மகிழ்ச்சியாகவும் நடந்து கொண்டிருக்க அவரது வீட்டில் அன்பான உறவினர்கள் மற்றும் சிரிப்பு நிறைந்திருக்கும் போது,ஒரு சம்பவம் ஷேன் நிகமின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றுகிறது.உள்ளூரில் கலையரசனுடன் ஒரு சிறிய வாக்குவாதத்தில் தொடங்கும் விஷயம் பிரச்சனையில் முடிகிறது. அன்று மாலை ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கும் தனது காதலி நிஹரிகாவை பார்க்க ஷேன் தனது செல்போனில் பேசிக்கொண்டே தனது காரை ஓட்டுகிறார்.வழியில் நாய் குறுக்கே வந்தால் எதிர்பாராத விதமாக நிறைமாதக் கர்ப்பிணியான ஐஸ்வர்யா தத்தா மீது காரை மோதிவிடுகிறார்.அந்த ஊர் மக்கள் ஷேனை பிடித்து அடித்து உதைத்து விடுகிறார்கள். விபத்தில் சிக்கியது கலையரசன் மனைவி. இந்த சம்பவம் ஷேனின் வாழ்க்கையில் ஒரு பெரும் மோதலாக மாறி,இருவரையும் மட்டுமல்ல,அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கிறது.பிறகு ஷேன் நிஹரிகா திருமணம் நடந்ததா ஐஸ்வர்யா தத்தா மற்றும் அவரது வயிற்றிலிருக்கும் குழந்தை நிலை என்னவாயிற்று கலையரசன் ஷேன் மோதல் எங்கே போய் முடிந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
கதையின்நாயகனாக சத்தியமூர்த்தி கதாபாத்திரத்தில் ஷேன் நிகம் அழுத்தமான நடிப்பில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விடுகிறார்.
கலையரசன் துரைசிங்கம் கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தியிருக்கிறார்.
மீரா கதாபாத்திரத்தில் நிஹாரிகா கொனிடேலா அனைவரையும் கவர்கிறார்.
மற்றும் ஐஸ்வர்யா தத்தா,சரண்,கீதா கைலாசம், பாண்டியராஜன்,கருணாஸ், சூப்பர் சுப்பராயன் என அனைத்து கதாபாத்திரங்கள் தங்கள் கதாபாத்திரங்களுக்கு வலுவூட்டி பிரகாசிக்கிறார்கள்.
சாம் சிஎஸ் இசை,ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ் குமார் அவர்களின் ஒளிப்பதிவு,எடிட்டர் வசந்தகுமார் அவர்களின் எடிட்டிங் படத்திற்கு பலம்.
பல்வேறு திருப்பங்கள் நிறைந்த அழுத்தமான கதைக்களத்தை கையாண்ட இயக்குநர் வாலி மோகன் தாஸ் அவர்களுக்கு பாராட்டுகள்.
மெட்ராஸ்காரன் அனைத்து நகரத்திலும் வெல்லுவான்.
