“மாறன்” விமர்சனம்


சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, “ஆடுகளம் நரேன், ராம்கி, போஸ் வெங்கட், “மாஸ்டர்” மகேந்திரன், நடித்துள்ள படம் “மாறன்”.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இயக்கம் கார்த்திக் நரேன்.
நேர்மையான பத்திரிக்கையாளராக இருக்கும் ராம்கி ஒரு பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றிய உண்மையை கண்டுபிடித்து பத்திரிகையில் எழுதியதால் ரவுடிகளால் கொல்லப்படுகிறார் .அதே சமயத்தில் பிரசவத்தின்போது அவரது மனைவியும் உயிரிழக்கிறார். ராம்கியின் மகன் தனுஷ் அவங்க அம்மா இறக்கும் பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்து விட்டு இறந்து விடுகிறார்.
இப்ப அந்த குழந்தையை வளர்க்கிற பொறுப்பு தனுசுக்கு வருகிறது.
ஒருவழியாக 2000ல்  ஆரம்பிக்கும் கதை தனுஷ் தந்தை மறைவுக்குப்பின் 2021 என்று டைட்டில் போட்டு ஆரம்பிக்கிறார் இயக்குனர்.
படத்தின் அறிமுக காட்சியிலேயே தனுஷ்  மதுபான பாரில் போதையில்  ரவுடிகளுடன் சண்டையிட்டு   காவல்நிலையம் செல்கிறார்.அங்கு வந்த கதாநாயகி மாளவிகா மோகனன் விளக்கம் சொல்லி தனுசை அழைத்து செல்கிறார் .
ஏன் காவல் நிலையம் செல்கிறார் ..!
தனுஷ் அவரது தந்தை போலவே ஒரு நேர்மையான பத்திரிகையாளராக இருந்து உண்மையை எழுதியதால் பலரின் பகைக்கு ஆளாகிறார்.ஒரு புதிய நிறுவனத்தில்  வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே பிரபலமான பத்திரிகையாளர் ஆகிறார் தனுஷ்.
தனது கல்லூரி போலீஸ் நண்பர்  கேட்டதால் அரசியல்வாதியான சமுத்திரக்கனி செய்யும் ஓட்டுப்பதிவு இயந்திரம் முறைகேட்டை ஆதாரங்களுடன் கண்டுபிடித்து தனது வேலை பார்க்கும் பத்திரிக்கையில் எழுதுகிறார் தனுஷ் இதனால் அரசியல் பகயை சம்பாதிக்கிறார் தனுஷ்.இதனால் தனது தங்கையை கடத்தி தீ வைத்து  எரிப்பது போல் ஒரு காட்சி வருகிறது.
இதுதான் படத்தோட முதல் பாதி படத்தோட இரண்டாம் பாதி தனது தங்கை கடத்தி உண்மையில் தீ வைத்து எரிக்கப்பட்டாரா,  இல்லையா என்பதுதான் இரண்டாம்பாதி.
“மாறன்”என்ற நேர்மையான பத்திரிக்கையாளராக தனுஷ்
அடுத்து கதாநாயகி மாளவிகா மோகனன் . பேருக்கு இவரை யூஸ் பண்ணி இருக்காங்க.

மிகவும் சுமாரான திரைக்கதை

அண்ணன் தங்கை பாசம் காதல் ஆகியவற்றை அங்கங்கே வேண்டும் என்று திணித்தது போல உள்ளது.பல காட்சிகளில் வேண்டா வெறுப்பாகவே தனுஷ் நடித்து இருக்கிறார் என்பது படம் பார்க்கும் பலரின் கருத்தாகவே இருக்கும்.
சமுத்திரகனியின் வில்லத்தனமான நடிப்பைஇன்னும் கொஞ்சம் நன்றாக காட்டி இருக்கலாம் .
இரண்டு மூன்று சீன்களில் மட்டுமே வந்த இயக்குனர், நடிகர் அமீரின் கதாபாத்திரமே தவறு என்றுதான் சொல்ல வேண்டும்.ஏனென்றால் தான் எந்த தவறு செய்தாலும் பணம் மட்டுமே குறிக்கோளாக இருந்து தனது பிள்ளையை மேல்படிப்பு படிக்க வைக்க நினைக்கும் தந்தையாக தான் வருகிறார் அமீர்.தனது குழந்தையின் படிப்பிற்காக என்ன தவறு வேணுனாலும் செய்யலாம் .அதுவும் படத்தில் அமீர் செய்திருக்கும் தவறு ஒரு தேசத் துரோக மான செயல் இதைதவிர்த்திருக்கலாம் .
ஜி.வி .பிரகாஷ்குமார் இசையில் “பொல்லாத உலகம்” பாடல் மட்டுமே கேட்கும்படி உள்ளது பின்னணி இசை சுமார்
“மாஸ்டர்” மகேந்திரன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
தனுஷ் “மாறன்” என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஒரு நல்ல பத்திரிக்கையாளராக ஜெயித்து இருக்கிறாரா என்று மக்களும் ரசிகர்களும் தான் முடிவு சொல்ல வேண்டும்.

இந்த “மாறன்” ஒரு முறை பார்க்க லாம்.