மரியா விமர்சனம்

 

சாய்ஸ்ரீ பிரபாகரன் மரியா என்கிற கதா பாத்திரத்தில் கன்னியாஸ்திரியாக 15 வருடங்கள் கிறிஸ்தவ தேவாலயத்தில் பணிவிடை செய்து வருகிறார். விடுமுறைக்காக சென்னை வரும் சாய்ஸ்ரீ பிரபாகரன் தனது உறவினரான சித்து குமரேசனை சந்திக்கிறார், சித்து குமரேசன் தனது காதலன் விக்னேஷ் ரவி மற்றும் மற்றொரு ஜோடியுடன் ஒரு குடியிருப்பை பகிர்ந்து கொண்டு.இந்த இரண்டு ஜோடிகளும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களோடு சாய்ஸ்ரீ பிரபாகரனும் தங்கிக் கொள்கிறார். இவர் பைபிள் படிப்பது, பிரேயர் செய்வது என்று இருந்த நிலையில் முதல் நாள் இரவு இளம் ஜோடிகள் காதல் கொள்வதையும், அவள் சுவர்களில்  வழியாக கேட்கும் சத்தத்தில் அறை தோழர்களின் காதல் லீலைகள் உணர்ச்சி மிகுந்த பாலியல் ஈடுபாட்டில் ஈற்கப்படுகிறாள்.இதனால் சாய்ஸ்ரீ பிரபாகரன் மனதில் மாற்றம் வருகிறது. இந்த கன்னியாஸ்திரி வாழ்க்கை வேண்டாம், சாதாரண பெண்களைப் போல் ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்ளும் வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறார். கன்னியாஸ்திரி வாழ்க்கையிலிருந்து வெளியேறி சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்படுகிறார்.இதனை அவர் தாயிடம் போய் கூறுகிறார் ஆனால் அவரது தாய் அதை ஏற்க மறுத்து,அவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். காம இச்சையால் தவிக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன் கிறிஸ்தவத்தை வெறுத்து, அதற்கு எதிரான சாத்தானியவாதிகள் குழுவுடன் இணைந்து பயணிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார். அதன் பின் காம வெறியில் அவதிப்படும் அவரது வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
மரியா கதாபாத்திரத்தில் சாய்ஸ்ரீ பிரபாகரன் உணர்ச்சிகளை கண்களால் காட்டி இயல்பாக நடித்துள்ளார்.
பிற கதாபாத்திரங்களான பாவெல் நவகீதன்,சித்து குமரேசன்,விக்னேஷ் ரவி, பாலாஜி வேலன்,சுதா புஷ்பா,அபிநயா ஆகியோர் கதைக்கு ஏற்றவாறு கச்சிதமாக நடிப்பை வழங்கியுள்ளனர்.
இசையமைப்பாளர் அரவிந்த் கோபாலகிருஷ்ணன் மற்றும் பரத் சுதர்ஷன் இசையும்,ஒளிப்பதிவாளர் மணி சங்கர் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது. ஒரு மதத்தை அடிப்படையாக வைத்து இப்படி ஒரு சர்ச்சைக்குரிய கதையை எடுத்து இருக்கும் இயக்குனர் ஹரி கே சுதன் அவர்களை பாராட்டுவதா இல்லை வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
மரியா சாத்தானின் மாற்றம்.