கதையின் நாயகன் கிச்சா சுதீப் போலீஸ் அதிகாரியாக களம் இறங்கி இருக்கிறார்.பிரபல தாதாவான நவீன் சந்திரா குழந்தை கடத்தல், போதைப்பொருள்,கட்டபஞ்சாயத்து, கொலை,கொள்ளை என்று தனி ராஜாங்கமாக வாழ்கிறான்.இதனால் பல பிரச்சனைகளை சந்திப்பதால் குழந்தை கடத்தலை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறான்.இந்தநிலையில் நவீன் சந்திராவின் தம்பி விக்ராந்த் காதலை எதிர்க்கும்போது அவருக்கு தெரியாமல் காதலியுடன் தலைமறைவாக சென்று விடுகிறான்.அது மட்டுமில்லாமல் விக்ராந்த் பணத்திற்காக 18 குழந்தைகளை கடத்தி அணைக்கட்டு அருகே ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அடைத்து வைக்கிறார்.அந்த அணையில் நீர் மட்டம் ஒரு அளவிற்கு மேல் ஏறினால் குழந்தைகள் மூழ்கி இறந்து விடும் அபாய நிலை உள்ளது. அந்த இடம் போலீசிற்கும்,நவீன் சந்திராவுக்கும் தெரியாமல் இருக்க,விக்ராந்த்தை கைது செய்து குழந்தைகளை மீட்க களம் இறங்குகிறார் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அதிகாரி கிச்சா சுதீப். இந்நிலையில் தம்பி காணாமல் போனதை அறிந்து கொலைவெறியில் இருக்கும் நவீன் சந்திரா அவனை தேடும் பணியில் ஈடுபடுகிறான்.விக்ராந்த்தை எப்படியாவது உயிருடன் கைது செய்து குழந்தைகளை மீட்க களம் இறங்குகிறார் மார்க்.இந்த சமயத்தில் பெண் முதல்வர் லோகநாயகி, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்க, தனக்கு பிறகு கட்சியை நடத்த சீனியர் ஒருவரை தேர்ந்தெடுத்து தன் கணவன் மற்றும் மகனிடம் சொல்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத முதல்வரின் கணவனும் மகனும் இதற்கு சம்மதிக்காமல் முதல்வர் பதவிக்காக லோகநாயகியை கொல்கின்றனர். இந்த கொடூர செயலை டாக்டர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் அவர்களுக்கு தெரியாமல் பதிவு செய்கிறார். முதல்வர் பதவிக்கு தாய் சம்மதம் தெரிவித்ததாககடிதம் கொடுத்து விடுகிறான் மகன். அதன் பின்னர் டாக்டரின் மொபைல் போனில் படம் பிடித்ததை அறிந்து கொள்ளும் முதல்வர் மகன் டாக்டரை தேடி வீட்டிற்குச் செல்கிறார். அந்த போனை வைத்திருக்கும் டாக்டரின் மகனை தேட, அவன் காணாமல் போன கடத்தப்பட்ட 18 குழந்தைகளின் ஒருவன் என்பதை அறிந்து கொண்டு அதிர்ச்சியாகிறான் முதல்வரின் மகன். அந்த டாக்டரின் குழந்தையை கண்டுபிடிக்க ஒரு போலீஸ் குழு அமைய அவர்களின் தேடலில் எந்தவித பலனும் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் விக்ராந்த் இன்னொரு போலீஸ் குழுவால் கொல்லப்பட,குழந்தைகள் இருக்கும் இடம் தெரியாமல் போகிறது.நவீன் சந்திரா தன் தம்பியை கொன்ற போலீசை அழிக்கவும், டாக்டர் மகனை கண்டுபிடித்து கொன்று வீடியோவை அழிக்கவும் முழு முயற்சியில் ஈடுபடுகிறான். சஸ்பென்ஷனில் இருக்கும் மார்க் தன் போலீஸ் குழுவுடன் சேர்ந்து குழந்தைகளை தேடி கண்டுபிடித்தாரா அவர்களை காப்பாற்றினாரா 24 மணி நேரத்திற்குள் பதவி ஏற்க இருக்கும் முதல்வர் மகனின் சதியை முறியடித்து மாநிலத்தை காப்பாற்றினாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
கிச்சா சுதீப் சீருடையில் இல்லாத போலீஸ் அதிகாரியாக பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
மற்றும் நவீன் சந்திரா,குரு சோமசுந்தரம், விக்ராந்த்,யோகி பாபு,ஜி.எம்.குமார்,சுப்பு பஞ்சு,ரோஷினி பிரகாஷ்,அர்ச்சனா கொட்டிகே,தீப்ஷிகா,அஷ்வின் ரமாபா நேசன்,பிரத்பல் ஹாசன்,கோட்பால் ஹாசன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சேகர் சந்திராவின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத் அவர்களின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
அனைவரும் ரசிக்கும் வண்ணம் விறுவிறுப்பான காட்சிகளை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் விஜய் கார்த்திகேயன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும்.
மார்க் அதிரடி ஆக்ஷன் அக்மார்க்.
