“மிஸ்டர் எக்ஸ்” விமர்சனம்

நாயகன் ஆர்யா உளவுத்துறையில் பணியாற்றுகிறார்.இந்தியாவின் இராணுவ உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் சரத்குமார்,உலகையே அழிக்கக்கூடிய அணு ஆயுதம் தயாரிக்கும் மூலப் பொருள் அடங்கிய ஒரு பேழையை இமயமலையில் பாதுகாத்து வருகிறார்.இந்த பேழையையும் சரத்குமாரையும் ரஷ்யா நாட்டின் இராணுவத்தினர் சிறைபிடித்து ரஷ்யாவுக்கு கொண்டு செல்கிறார்கள்.அணு ஆயுத  மூலப் பொருள் பேழையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர ஆர்யா ரஷ்யாவுக்கு தன் சக அதிகாரியான காளிவெங்கட்டுடன் செல்கிறார்.பேழையை ஆர்யா மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவரும் வேலையில்,வில்லனான கௌதம் ராம் கார்த்திக் அப்பேழையை பாகிஸ்தானுக்கு விற்க கைப்பற்றுகிறார்.அவரிடமிருந்து ஆர்யா அந்த பேழையை மீட்டாரா இல்லையா என்பதே மீதிக் கதை.
உளவுத்துறை உளவாளியாக நடித்திருக்கும் ஆர்யா கதாபாத்திரத்திற்க்கு உயிரோட்டம் கொடுத்து சிறப்பாக நடித்துள்ளார்.
உளவுப் பிரிவின் தலைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியார் துணிசாலான நடிப்பை மேற்கொண்டுள்ளார்.
கௌதம் ராம் கார்த்திக் புதுமையான வில்லனாக மிரட்டியுள்ளார்.
சரத்குமார்,மஞ்சு வாரியார்,அனகா, அதுல்யா,ரைஷா வில்சன்,காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவும்,திபு நினன் தாமஸின் இசையும் கதைக்கு பலம்.
இந்திய ராணுவத்தின் உளவு பிரிவினர்கள் நாடு அமைதிப் பூங்காவாக இருக்க எப்படி எல்லாம் பாடுபடுகிறார்கள் என்ற கதையை கயில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இரண்டாம் பாகத்திற்கும் வழிவகுத்திருக்கும் இயக்குநர் மனு ஆனந்த் அவர்களுக்கு பாராட்டுகள்.
மிஸ்டர் எக்ஸ் சமூக அக்கறை நிறைந்த த்ரில்லர்.